வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

All India Bank Strike Postponement Idamporul

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி சம்மேளனம் அறிவித்து இருக்கிறது. வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிருத்தி வருகிற ஜனவரி 30,31 நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கிகள் அறிவித்து இருந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமா வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. “ வழக்கம் போல ஜனவரி 30, 31 நாட்களில் வங்கிகள் இயங்கும் … Read more

கொரோனாவை அடுத்து மிரட்டும் பன்றி மற்றும் பறவை காய்ச்சல்!

Swine Flu Spreading Fast In Kerala Idamporul

இன்னும் கொரோனாவே ஓயாத நிலையில் அடுத்ததாக பன்றி மற்றும் பறவை காய்ச்சல் தேசத்தை தொற்றிக் கொண்டு இருக்கிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு இருந்த 3600-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கேரளாவை அடுத்து அருகில் இருக்கும் தமிழகத்திலும் இது பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையில் பாதுகாப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. “ மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்றாலும் உருமாறிய வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை … Read more

2030-ற்குள் இந்தியாவில் ரயில்கள் 100 சதவிகிதம் பசுமை ரயில்களாக மாற்றப்படும் – இந்தியன் ரயில்வே

100 Percent Non Emission Trains In India Before 2030

2030-ற்குள் இந்தியன் ரயில்வேயில் செயல்படும் ரயில்கள் 100 சதவிகிதம் பசுமை ரயில்களாக மாற்றப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்து இருக்கிறது. பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் ரயில்கள் 2030-ற்குள் முற்றிலுமாக நீக்கப்பட்டு இந்தியன் ரயில்வே முழுக்க முழுக்க பசுமை ரயில்களை இயக்கும் நிறுவனமாக 100 சதவிகிதம் மாறும் என இந்தியன் ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 2014-யை ஒப்பிடும் போது தற்போது மின்மயமாக்கல் 10 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. “ ரயில்களை மாற்றுவது போல தனிநபர்கள் … Read more

கடந்த ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை பள்ளங்களினால் ஏற்பட்ட விபத்தில் 1,481 பேர் பலி!

Due To Road Potholes 1481 Died In 2022 Calender Year

நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகளினால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 1,481 பேர் பலியாகி இருக்கின்றனர். குழாய் பணிகள், லைன் பணிகள் என்று தோண்டப்படும் குழிகள் அவ்வப்போது மூடப்படாததாலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களாலும் என இதனால் ஏற்பட்ட விபத்துக்களால் மட்டுமே கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் 1,481 பேர் பலியாகி இருக்கின்றனர். 2,171 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ சாலை வரி என்று தனிப்பட்ட ஒவ்வொரிடமும் வசூலிக்கப்படும் வரிகள் … Read more

பெருகும் BF 7 வேரியன்டுகள், அறிவிக்கப்படுமா மீண்டும் ஊரடங்கு?

Chance Of Lock Down Again Idamporul

பெருகிவரும் BF 7 வேரியன்டுகளால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என அச்சத்தில் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். சீனாவிலிருந்து உலக நாடுகள் எல்லாம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது BF7 என்னும் வேரியண்டாக உருவெடுத்து பன்மடங்கு வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அது கண்டறியப்பட்டு இருப்பதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். “ மக்கள் தங்கள் தாங்களே காத்துக் கொள்ளும் போது பரவல் என்பது சாத்தியமற்றது. மீண்டும் … Read more

அடுத்த ஒரு மாதத்திற்குள் BF7 வேரியன்ட் இந்தியாவிலும் வேகம் எடுக்கும் – சுகாதாரத்துறை

Corona Virus BF7 Variant Will Spread Fast Ind Next 30 Days

அடுத்த்த ஒரு மாதத்திற்குள் BF7 வேரியன்ட் இந்தியாவில் வேகமெடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. அதிவேகமாக பரவக்கூடிய திறன் கொண்ட கொரோனா வைரஸ்சின் BF7 உருமாற்றம் இந்தியாவில் அடுத்த 30 நாட்களுக்குள் வேகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவரலாமா என்ற சிந்திப்பிலும் அமைச்சகம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த பண்டிகை காலங்கள் மிக முக்கியமான காலங்களாக அறியப்படுகிறது. மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு … Read more

பெருகிவரும் BF7 வேரியன்ட், தமிழகத்தில் கட்டாயம் ஆக்கப்படுமா முககவசம்?

Corona BF 7 Variant Idamporul

உலகம் முழுக்க BF7 வேரியன்ட் பெருக்கமெடுத்து வருவதால் தமிழகத்தில் முககவசம் மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2019-யில் ஆரம்பித்த கொரோனா இன்னும் ஓயாத நிலையில், உலக நாடுகள் முழுக்க BF7 என்ற புதிய கொரோனா வேரியன்ட் கிளம்பி இருக்கிறது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு BF7 தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. “ உலக நாடுகள் தடுப்பூசிகளை மும்முரப்படுத்தினாலும் … Read more

இந்தியாவில் கடந்த ஆண்டை விட பன்மடங்காக உயர்ந்து இருக்கிறது UPI பரிமாற்றம்!

UPI Transaction Becomes Much Higher In India

இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தேசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2021 காலக்கட்டத்தில் ஆயிரம் கோடிகளாகவே இருந்த UPI பரிமாற்றங்கள் நடப்பு காலக்கட்டங்கலில் ட்ரில்லியனை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. “ பணப்பரிமாற்றம் எளிதாகி விட்டதால் சாமானியனும் பயன்படுத்த எளிதாக இருப்பதால் UPI பரிமாற்றம் இந்த … Read more

மீண்டும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் துவக்கம்!

Corona Test Is Again Started In Airports Central Health Ministry Idamporul

உலக நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை துவங்கி இருக்கிறது இந்தியா. புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் மூன்று பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை துவங்கி இருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சகம். “ நிலைமையை பொறுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

இந்தியாவில் விமான பயணத்திற்கு இனி மாஸ்க் கட்டாயம் இல்லை!

Mask Is Not Mandatory For Flight Travel Indian Aviation Sector

இந்தியாவில் இனி விமான பயணத்திற்கு மாஸ்க் கட்டாயம் இல்லை என ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா காலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்ட முக கவசம், இன்றளவும் விமான நிலையங்களிலும், விமான பயணங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வெகுவாக இந்தியாவில் குறைந்து இருப்பதால் ஒன்றிய அரசு ’விமான பயணத்தின் போது முகக்கவசம் கட்டாயம்’ என்ற விதியை தளர்த்தி இருக்கிறது. “ மக்களுக்கு ஏற்கனவே எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது என்பது பழகி விட்டது. முக கவசத்தை தினம் … Read more