காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியீடு!

Naai Sekar First Look Released In Net

நடிகர் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் முதல் பார்வை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ’ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், சதீஷ் மற்றும் பவித்ரா லக்சுமி நடிக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் முதல் பார்வை இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ காமெடி நடிகர்கள் ஹீரோக்கள் ஆகும் வரிசையில், நடிகர் சதீஷ்சும் தற்போது இணைந்துள்ளார், அதில் வெற்றி பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ”

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Hip Hop Aadhi Sivakumarin Sabadham Releasing Date Announced

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ப்ராங்ஸ்டர் ராகுல், விஜே பார்வதி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” கதை, திரைக்கதை, இயக்கம், இசை, கதாநாயகன் என்ற டைட்டில் கார்டுடன் களம் இறங்க காத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இந்த களத்தில் … Read more

டி20 போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் விராட் கோலி!

Virat Kohi Officially Step Down From T20 Captaincy

சில நாட்களாகவே இணையத்திலும், பத்திரிக்கை செய்திகளிலும் விராட் கோலி ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன. பிசிசிஐ அதை மறுத்து வந்தாலும் தற்போது விராட் தனது சார்பிலிருந்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் பணிச்சுமை காரணமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டும், தான் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது போக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் … Read more

’ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rudra Thandavam Releasing Date Announced

ரிஷி ரிச்சர்டு நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஜி எம் பிலிம் கார்பரேசன்ஸ்’ மற்றும் ‘செவன் ஜி பிலிம்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு ரிஷி, கவுதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி மற்றும் பலர் நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று உலகம் முழுக்க வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ ரிஷி ரிச்சர்டு மற்றும் மோகன் ஜி இணையும் … Read more

தமிழகத்தில் நடைபெற இருக்கிறது மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம்!

TamilNadu Mega Vaccination 2.0 Date Announced

ஏற்கனவே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 12 அன்று நடை பெற்ற மெகா தடுப்பூசி முகாமில், 28 லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். இந்த வரவேற்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு வருகின்ற செப்டம்பர் 19, ஞாயிறு அன்று மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் அமைத்திட முடிவெடுத்துள்ளது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

TamilNadu Covid Updates 16 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 29 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. சில நாட்களாகவே பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்படுவது … Read more

அட்லீ-ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!

Atlee Shah Rukh Khan Film Titled

அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ’ ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன் தாரா மற்றும் பலர் நடித்து, ஹிந்தி மொழியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘லயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக அட்லீ படம் என்றாலே மசாலா, காதல், எமோசன்ஸ் என்று எல்லாம் ஒரு சேரக் கலந்த ஒரு படமாக இருக்கும். ஹிந்தி ரசிகர்களுக்கும் அட்லீ இதே … Read more

பேருந்துகளின் மூலம் நடத்தப்படும் கடத்தல்களை தடுக்க இனி பயணிகள் பரிசோதனை கட்டாயம்!

Passenger And Their Parcels Must To Be Checked Before The Bus Travel TNSTC

அரசுப்பேருந்துகளின் வாயிலாக தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க இனி பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் கட்டாயம் சோதனைக்குட் படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கார்கள், பைக்குகளில் தடை செய்யப்பட்ட பொருள்களான கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தினால் பிடிபட்டு விடுகிறோம் என்று ஒரு சில கும்பல்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பது போல ஒரு சில கடத்தல் பொருள்களை கை மாற்றுவதாக வந்த தகவல்களின் படி, இனி பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் பொருள்கள் … Read more

தமிழகத்தில் 14 நாட்களில் 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று!

83 School Students Confirmed Corono Positive In TamilNadu

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த நாளான செப்டம்பர் 1 முதல் நேற்றைய தினம் வரை, சுமார் 83 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு செப்டம்பர் 1-இல் இருந்து, 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தகுந்த கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் பாடத்திட்டங்கள் செயல்படலாம் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்ததிலிருந்து நேற்றைய தினம் வரை 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 16 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 432 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,960 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 38,361 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தற்போது குழந்தைகளுக்கு … Read more