அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Arun Vijay Borrder Movie Trailer Released In Net

அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ’ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய் ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி படேல் மற்றும் பலர் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஒரு நாளிலே 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது பார்டர் திரைப்படத்தின் ட்ரெயிலர். ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப்படங்களை … Read more

மும்பை பெண் கொடூரமாக கொலை! – பிறப்புறுப்பில் இரும்பு கம்பியைப் புகுத்தி தாக்கி பயங்கரம்

Mumbai Women Brutally Raped And Killed

மும்பை சாகி நாகா பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் டெம்போ ஒன்றிற்குள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த காவலாளி ஒருவர் இது குறித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலிஸ் அந்த பெண்ணை கைப்பற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலை ஆராய்ந்ததில், அந்த … Read more

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

Neet Exemption Bill Tabled In TN Assembly

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நேற்று 19 வயதுடைய சேலம் மாணவர் தனுஷ் என்பவர், தனது மூன்றாவது முயற்சியில் நீட் தேர்வை எழுத விளைந்த போது, அதை எதிர் கொள்ள முடியாமல் பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுக்க தீப்பொறியைக் கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் ஆளும் தற்போதைய கட்சியினை விமர்சித்து தங்கள் கருத்துக்களை … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 13 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,907-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 40,573-ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனோ மீட்பு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு … Read more

ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய டேனியல் மெட்வடேவ் – அமெரிக்க ஓபன் 2021

Medvedev Win US Open Men Single Final

ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற ஜோகோவிச்சின் கனவை தவிடு பொடியாக்கியது டேனியல் மெட்வடேவ்வின் அபார ஆட்டம். அமெரிக்க ஓபன் ஆடவர் சிங்கிள் இறுதி போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவை எதிர் கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4,6-4,6-4 என்ற நேர்செட் புள்ளி கணக்கில் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற ஜோகோவிச்சின் சாதனை … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 12 09 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தொற்றுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,168-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரு நாளில் தமிழகத்தில் குணமாகி வெளியானவர்களின் எண்ணிக்கை 1,512-ஆக உள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 212 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 197 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் 16,473 … Read more

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடம்!

Nilgiris Has Vaccinated 71 Percent Of Its Eligible Population

தமிழகத்தில், தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி மாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை வகிக்கிறது. ஓட்டு மொத்த தமிழகத்தை பொறுத்தவரை, தடுப்பூசிக்கு தகுதியுள்ள வயதினர்களுள் 46 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுள் 12 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால் நீலகிரி மாவட்டம் தகுதியான வயதினர்களுள் 71 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு இன்று … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செல்பி’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

Selfie First Look

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தில் முதல் பார்வை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளிடப்பட்டுள்ளது. ’வி கிரியேசன்ஸ்’ மற்றும் ‘டி ஜி பிலிம் கம்பெனி’ தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மற்றும் வர்ஷா பொல்லம்மா இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தின் முதல் பார்வை இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மதிமாறன், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ‘வி கிரியேசன்ஸ்’ … Read more

18 வயதில் அமெரிக்க ஓபன் பட்டம், சாதித்த எம்மா ரடுகானு!

Emma Raducanu Wins US Open Grand Slam

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 18 வயதே ஆன எம்மா ரடுகானு, கனடாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை லேலா அன்னியை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பதினெட்டு வயதே ஆன பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு, கனடா வீராங்கனை லேலா அன்னியை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4,6-3 என்ற நேர்செட் கணக்கில் லேலா அன்னியை வீழ்த்தி எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் … Read more

இரண்டு சிகரங்களை சிங்க வேகத்தில் ஏறி சாதனை படைத்த சி ஐ எஸ் எப் பெண்மணி!

Geeta Becomes Fastest Indian Women Summits Two Peaks

மத்திய தொழிற் பாதுகாப்பு பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கீதா சமோதா, ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ ஆகிய இரண்டு மாபெரும் சிகரங்களின் உச்சியை மிகக்குறுகிய கால இடைவெளியில் அடைந்து சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும், ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் (5,642 மீ/18,510 அடி) என்னும் சிகரத்தை முதலில் அடைந்திருந்த கீதா சமோதா, அதற்கு பின் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமாக … Read more