நீட் தேர்வினால் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் மற்றுமொரு தற்கொலை!

Neet Exam Fear Kills 19 Years Old Student In TamilNadu

சேலம் மாவட்டம் மேட்டுரைச் சேர்ந்த விவசாயியின் மகன் தனுஷ் என்பவர் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூளையூர் என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தான் இந்த தனுஷ் என்பவர். தனது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 12 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 338 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,688 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,885 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இந்தியாவைப் பொறுத்த வரை பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் … Read more

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில், இரவு 8 மணி நிலவரம் வரை 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,146-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,517 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனோ சம்மந்தப்பட்ட எல்லா செயல்பாடுகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது … Read more

தன் கோல்டன் ஸ்லாம் கனவை தகர்த்தவரை யு.எஸ்.ஓபனில் பழி தீர்த்த ஜோகோவிச்!

Djokovic Won In US Open Semi Final

யு.எஸ்.ஓபன் அரையிறுதியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை 3-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். யு.எஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், தனது ஒலிம்பிக் தங்க கனவை தகர்த்த ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர் கொண்டார். நீண்ட நேரம் நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் 4-6,6-2,6-4,4-6,6-2, என்ற புள்ளி கணக்கில் ஜோகோவிச், ஸ்வெரெவ்வை தோற்கடித்து தன் கோல்டன் ஸ்லாம் கனவை தகர்த்தவரை பழிக்கு … Read more

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை – பிரதமர்

Tamil Seat In Banaras Hindu University

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டை தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிக்கை விடுத்துள்ளார். உலகின் மிகத் தொன்மையான மொழியாக கருதப்படும் தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அத்தகைய பெருமை மிக்க தமிழ் மொழியோடு ஊறிப் பிறந்து தேசியப் பற்று படைப்புகளுக்கும், தமிழ்ப் படைப்புகள் பலவற்றிற்கும் வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் உத்திரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் … Read more

ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

Six Year Old Girl Raped In Hyderabad

ஹைதராபாத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் தீப்பொறியைக் கிளப்பி உள்ளது. சைதாபாத் காவல் நிலையத்திற்கு சிறுமி ஒருவர் காணவில்லை என்று அவரின் பெற்றோரின் மூலம் ஒரு புகார் வந்திருந்தது. அந்த புகாரின் பேரில் விசாரித்த காவலர்கள், விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் தான் அவரின் அண்டை வீட்டில் வசித்து வந்த ஆறு … Read more

தீபாவளிக்கு வெளியாகிறது சிலம்பரசனின் ‘மாநாடு’!

Maanaadu To Hit Screens This Deepavali

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ்’ புரொடக்சன் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதி ராஜா, கருணாகரன், மனோஜ், ப்ரேம் ஜி , ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் ’மாநாடு’ திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு (நவம்பர் 4) அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 11 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,42,350-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 36,963 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்த வரை இந்தியாவில் 72 கோடியைக் கடந்திருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 55.06 கோடி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,119-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,523-ஆக உள்ளது. தொடர்ந்து கொரோனோவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுக்க … Read more

மன அழுத்தம் குறைய என்ன செய்யலாம்?

Facing Depression

மன அழுத்தம் இன்று பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலையின்மை, வேலைப்பளு, காதல் தோல்வி, சமூக நெருக்கடிகள், இன்னல்கள் என்று பலவும் இன்று ஒரு மனிதனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஒரு சிலர் மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாது தற்கொலை என்ற விபரீத முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஓரு சாதாரண மனிதனை இன்னல்களுக்குள்ளாக்கும் இந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள என்ன செய்யலாம்? 1) பிடித்த செயல்பாடுகளுக்குள் மூழ்குதல் – ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு … Read more