கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 21 11 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 10,488 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 313 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது 4,65,662 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 12,329 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.30 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருக்கிறது!

Vaccination In India Reached 110 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 52.28 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 110.18 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 81.97 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். ” லட்ச கணக்கில் மக்கள் தொகையை கொண்ட நாடுகளே தடுப்பூசி செயல்பாடுகளில் திணறுகின்ற போது 133 … Read more

ICC T20 WC 2021 | SEMI FINAL 1 | இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது நியூசிலாந்து அணி!

ICC T20 WC 2021 Semi Final 1 NewZealand Win Against England

ஐசிசி டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது நியூசிலாந்து அணி. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களம் இறங்கிய நியூசிலாந்து அணி குப்தில், வில்லியம்சன் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை தொடர்ந்து இழந்த போதும், அதற்கு பின் சுதாரித்து ஆடி 19 ஓவர்களில் இலக்கை எட்டியது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 51(37) … Read more

உலகின் 96 நாடுகள் அங்கீகரித்துள்ள இந்தியாவின் கொரோனோ தடுப்பூசிகள்!

Indian Vaccine Covaxin And Covishield Recognised By 96 Countries Says Union Health Minister

உலகின் 96 நாடுகள் இந்தியாவில் உபயோகிக்கும் கொரோனோ தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை உலகம் முழுக்க அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிக்கை விடுத்துள்ளார். “ இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை நெருங்கி வரும் இந்த நிலையில் உலகின் பல … Read more

மழை நிலவரம் | ’தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்’

Indian Meteorological Department Given Red Alert To Sevan Districts Of TN

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டையும் அறிவித்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கொடுத்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம். ” ஆங்காங்கே … Read more

ICC T20 WC 2021 | SEMIFINAL 1 | இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து!

ICC T20 WC 2021 Semi Final 1 NewZealand Vs England Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை நேருக்கு நேர் மோதிய 21 டி20 போட்டிகளில் 13-இல் இங்கிலாந்து அணியே வென்று முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்து அணியின் சிவசாமியாக கருதப்படும் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,466 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 10 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 460 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,61,849 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 11,961 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் 98.25 சதவிகிதம் என்ற உச்சநிலையில் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹிட் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!

Rohit Sharma Officially Named As Captain For NewZealand T20 Series

நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் ரோஹிட் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலககோப்பைக்கு பிறகு விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறப்பதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தாக நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹிட் சர்மா தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி 17 நவம்பர் 2021 அன்று ஜெய்ப்பூர் … Read more

ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை – தமிழக அரசு

Due To Heavy Rains Two Days Holiday For 9 Districts School And College In TN

வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் இந்த சூழலில் சென்னை உட்பட ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆங்காங்கே கொட்டித் தீர்த்து வரும் இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. “ இயற்கையின் பேரிடருக்கு மாநிலமே ஸ்தம்பித்து நின்றாலும் … Read more

மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு – தமிழக அரசு

Free Food For All In Amma Unavagam In Rainy Days

தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் எல்லா பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. அதிலும் முக்கியமாக தலைநகரம் ஸ்தம்பித்து உள்ள இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. “ காயும் வயிறுகளை குறைந்த பட்ச விலையில் ஆற்றிய அம்மா உணவகம், தற்போது பேரிடரின் போது … Read more