அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘அநீதி’ படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியானது!

Arjun Das Aneedhi Teaser Released In Net

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜீன் தாஸ் நடிக்கும் ‘அநீதி’ படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. Urban Boys Studios தயாரிப்பில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், அர்ஜீன் தாஸ், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் ‘அநீதி’ படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்தகாரம் படத்திற்கு பின் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு தனி ஒரு ஹீரோவாக ‘அநீதி’ படத்தில் களம் இறங்க இருக்கிறார் அர்ஜீன் தாஸ். கைதி படத்தில் பெரிதும் பாராட்டப்பட்ட வில்லனாக அறியப்பட்ட அர்ஜீன் … Read more

வெளியானது மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்களின் பயோபிக் ஆன தலைவி!

Thalaivi Releasing Today

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்களின் பயோபிக்-ஆக கருதப்படும் தலைவி திரைப்படம் பேண்டமிக் நிலைமை காரணமாக தொடர்ந்து தள்ளி போன நிலையில் இன்று திரையரங்குகளில் ஒரு வழியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு வர்தன் தயாரிப்பில், ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, பாக்யஸ்ரீ, மது, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் தலைவி படம் கொரோனோ சூழலில் தொடர்ந்து வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் இன்று திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக … Read more

இந்திய பெருங்கடல் எல்லைக்குள் ராஜாவாக அடியெடுத்து வைக்கும் ஐ என் எஸ் துருவ்!

India First Nuclear Missile Tracking Ship INS Dhruv

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கப்பலான ஐ என் எஸ் துருவ் இன்றிலிருந்து இந்திய பெருங்கடல் என்னும் ஆட்சிப்பகுதிக்குள் ராஜாவாக களம் இறங்க இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிட்டடு இணைந்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்து இருக்கும் கண்காணிப்பு கப்பல் தான் ஐ என் எஸ் துருவ். இந்த கப்பலின் மூலம் இந்தியப்பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோள்கள் மற்றும் … Read more

வெளியானது அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக்!

Annathae FL Realeased In Net

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டது. சன்பிக்சர் கலாநிதிமாறன் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் சிவா அவர்களில் இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன் தாரா, ஜாக்கி ஷெராப் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் இணையும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சிறிது நிமிடத்திலேயே இணையத்தில் வைரலாகி சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது. இது தான் தலைவர் அவர்களின் மேஜிக் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 10 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 264 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,42,046-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24,109-ஆக உள்ளது. இதற்கு முந்தைய நாள் இருந்த தொற்றைக்காட்டிலும் நேற்றைய தொற்று எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று புதியதாக 1,596 பேருக்கு கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu

தமிழகத்தில் இன்று 9 மணி நிலவரப்படி 1596 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஒரு நாளில் மட்டும் 21 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,094-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரே நாளில் மட்டும் 1534 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசி செயல்பாடுகளை பொறுத்தவரையில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் … Read more

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ அக்டோபரில் ரிலீஸ்!

Doctor Movie Releasing In October

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், வினய், மிலின்ட் சோமன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் டாக்டர் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் நிலையில் KJR ஸ்டுடியோஸ்சும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சனும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் தான் படத்தை அக்டோபரில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அனிருத் இசையில் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்துக்கொண்டி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் ஒரு … Read more

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் – மு.க.ஸ்டாலின்

CM Announced Porunai Museum Will Be Set Up In Nellai

சட்டபேரவையில் தனக்கு விதித்த நேரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லை மாநகரில் 15 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் என்னும் பெயரில் மாபெரும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வழிவகுக்கப்படும் என்று சட்டபேரவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக நடைபெறும் கீழடி அகழ்வாய்வுகளும் சரி, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாய்வுகளும் சரி, உணர்த்துவது ஒன்று தான் தமிழ் என்னும் நாகரீகம் இங்கு முளைத்த அனைத்து நாகரீகத்திற்கும் மூத்தது. அங்கு கிடைத்த சிதைவுகளையும் … Read more

ஐஐடி சென்னைக்கு தேசிய அளவில் முதல் தர அங்கீகாரம்!

IIT Madras

தேசிய கல்வி தரநிர்ணய வரிசையில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்ட தேசிய கல்வி தரநிர்ணய வரிசையில் ஐஐடி சென்னை நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மருத்துவ கல்லூரி பிரிவில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மூன்றாம் இடத்தையும், சிறந்த கல்லூரிப்பிரிவில் சென்னை லயோலோ கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ” தரம் வாய்ந்த கல்வியை தமிழகம் தேசம் முழுக்க பரப்பி … Read more

தலைவர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கும் ‘ அண்ணாத்த ‘ டீம்!

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு தேதியே அறிவித்து தலைவர் ரசிகர்களை குசிப்படுத்தி இருக்கிறது அண்ணாத்த டீம். ரஜினி காந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தை இயக்குநர் சிவா அவர்கள் இயக்க சன்பிக்சர் கலாநிதிமாறன் அவர்கள் தயாரித்து வெளியிட் இருக்கிறார்கள். இப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளி ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட்லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதியும் … Read more