இந்திய தண்டனை சட்டம் IPC – SECTION 100 பாலியல் விதி மீறல்களை பற்றி என்ன சொல்கிறது?

ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு பாலியல் விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பதிவாகிறது. இதில் பதிவான புகார்கள் மட்டுமே அடங்கும் எனில் பதிவில்லாத புகார்கள் என்பது எத்தனையோ இருக்கும். பயத்தில் புகார்கள் கொடுக்காமல் மறைத்தவர்கள் எத்தனை பேராக இருக்கும் என்பது கணக்கில் இல்லாதது. சிறுமிகள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் பாராமல் இன்றைய காலங்களில் அரங்கேறும் பாலியல் அத்துமீறல்களுக்கு இந்திய சட்டத்தில் எப்போதாவது தான் உயர்ந்த தண்டனை எனப்படும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு பாலினத்தின் மேல் … Read more

பள்ளி,கல்லூரிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு

கொரோனோ காலம் உலகத்திற்கே துன்ப காலம் என்றாலும் ஒரே ஒரு இனத்திற்கு மட்டும் அது இன்ப காலம். அது வேறு எந்த இனமும் அல்ல நம் மாணவர் இனம் தான். இணைய வழிக்கல்வி என்று கடந்த இரண்டு வருடங்களாக புத்தகங்களையே மறந்து இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு தலையில் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டாற்போல ஒரு கசப்பான செய்தி வந்திருக்கிறது. அது தான் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் … Read more

சிறுபான்மை இனத்தவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் தலிபான்கள்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முண்டாரக்ட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினர் 9 பேரை படுகொலை செய்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த 2001-இல் அல்கொய்தா அமைப்பு இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்காவில் நிகழ்த்தி இருந்திருந்தது. அன்றைய தலிபான்கள் அதை ஆதரித்தும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தும் வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா தலிபான்கள் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,457 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று,375 பேர் தொற்றுக்கு பலி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34,457 ஆக உள்ளது. மேலும் தொற்றுக்கு ஒருநாளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 375-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கையும் 4,33,964 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் வரை தேசிய மீட்பு விகிதம் 97.54 சதவிகிதமாக தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. … Read more

தமிழும் சரஸ்வதியும் இன்று – 20.08.2021- Vijay Television

சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க.

இந்தியாவில் 54.58 கோடி பேரை சென்றடைந்திருக்கும் கொரோனோ தடுப்பூசி!

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவது என்பது ஒரு கடினமான விஷயம் ஆகும். அதையும் தாண்டி இந்திய மக்கள் தொகையில் 54.58 கோடி பேருக்கு தடுப்பூசி சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 130 கோடி பேர் இருக்கும் இந்தியாவில் நாட்டிற்குள்ளேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அதை 54 கோடி பேருக்கு சென்றடையும் வகையில் செய்திருக்கிறது இந்திய அரசு. நம்மை விட அதிக தடுப்பூசி கை இருப்பு வைத்திருக்கும் … Read more

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள்!

சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் ஆப்கன் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் ஆப்கனின் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தி தளம் தனது இணையதளத்தில் அறிவித்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த அமெரிக்க படை ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 32,937 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 417 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 32,937 பேர் புதியதாக கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும், 417 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 4,31,642-ஆக உயர்ந்து உள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 17 லட்சம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 54.58 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் 32,937 பேர் … Read more

இலங்கையை புரட்டி போடும் டெல்டா வகை கொரோனோ வைரஸ்!

தொடர்ந்து சில நாட்களாகவே இலங்கையில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு டெல்டாவகை கொரோ வைரஸ் தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 160 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 5,935-ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனோ வைரஸ் தொடர்ந்து மாகாணங்களுள் பெருக்கெடுக்க … Read more