ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய நெகிழி வகை பொருள்களுக்கு தேசம் முழுக்க தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு எறியக்கூடிய அனைத்து நெகிழி வகை பொருள்களுக்கும் 2022 முதல் தேசம் முழுக்க தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மண்,கடல்,காடு என்று பூமியின் எங்கு பார்த்தாலும் தவிர்க்க முடியாத குப்பைகளாய் இருக்கிறது இந்த நெகிழிகள். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து மண்ணைத்தோண்டினாலும் அது அழியாமல் அப்படியே இருக்கும். எரித்தாலும் காற்றை மாசுபடுத்தும் புதைத்தாலும் பூமியில் மண்ணின் தன்மையை மாசுபடுத்தும். அதனை கருத்தில் கொண்டே 2022 முதல் தேசம் முழுக்க ஒரு முறை பயன்படுத்தப்பட்டு … Read more

தன்னம்பிக்கை என்பதற்கு அர்த்தம் கேட்டால் ‘உசேன் போல்ட்’ என்ற ஒரு பெயரில் சொல்லி விடலாம்

உலக அரங்கு, ஸ்பிரின்ட் களம், ஒட்டு மொத்த போட்டியாளர்களும் சிறுத்தை வேகத்தில் ஓடுகின்ற ஒரு களம். ஆனால் அங்கு அந்த சிறுத்தைகளை எல்லாம் முந்திக் கொண்டு ஒரு மின்னல் சிரித்துக்கொண்டே இலக்கை அடைகிறது. அவர் தான் உசேன் போல்ட். எது தன்னம்பிக்கை என்றால் இலக்கிற்கு அருகில் சென்று திரும்பி பார்த்து தன் பின்னால் ஓடுபவர்களிடம் நான் தான் இலக்கை முதலில் அடைய போகிறேன் என்பதை தன் புன்னகையில் அவர்களுக்கு வெளிப்படுத்தும் அந்த சுபாவம் தான். ஆம் தன் … Read more

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் வேலைத்திட்டமாக மாற்றம் – தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021-22 அறிக்கையில் நூறு நாள் வேலைத்திட்டம் பற்றிய பிரிவில், இனி நூறு நாள் வேலைத்திட்டம் நூற்று ஐம்பது நாள் வேலைத்திட்டமாக மாற்றி அமைக்கப்படும் என்றும் 273 ரூபாயாக இருந்த தினசரி கூலி 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிக்கை விடுக்கப்பட்டது. கிராம மற்றும் குக்கிராமங்களில் நடைபெறும் சிறு குறு பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட குழுவை அப்பணிதன் கீழ் அமைத்து சீரமைப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம். … Read more

பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு – தமிழக பட்ஜெட்

சென்னை கலைவாணர் அரங்கில் காலை முதலே தொடங்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோலியம் தொடர்பான அறிவிப்புகளின் கீழ், நடுத்தர ஏழை மக்களை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை மீதான வரியை மூன்று ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூபாய் 1160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அரசு சமாளித்துக்கொள்ளும் என்று அறிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே நூறு ரூபாய்க்கும் அதிகமாக … Read more

தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள்

தமிழக வரலாற்றில் இன்று முதல் முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட், தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல் பணிகள் பிரிவுகள் குறித்த அறிக்கையில் தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் விரைவில் அந்த காலி பணியிடங்கள் சீரூடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பபடும் என்றும் அறிவித்து இருக்கிறார். நீண்ட கொரோனோ இடைவெளியில் எந்த வித அரசு பணியிடங்களுக்கும் தேர்வுகள் நடக்காத நிலையில் தேர்வை எதிர் நோக்கி … Read more

இனி அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழி – தமிழக அரசு

தலைமைச்செயலகம் முதல் அனைத்து தமிழக அரசுத்துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்று தமிழக நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டபேரவையில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது மொழி மற்றும் மொழி சம்மந்தமான தொல்லியல் ஆய்வுகள் குறித்த அறிக்கையில் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சிக்கு என்று 80.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் ஆய்விற்கு ரூபாய் 5 கோடி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 40,120 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 585 பேர் தொற்றுக்கு பலி

தொடர்ந்து ஏற்றமாகவும் இறக்கமாகவும் இருந்து வரும் கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சராசரியாக நாற்பதாயிரம் என்ற நிலைக்கு அருகில் எப்போதும் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,120 ஆகவும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 585 -ஆக உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வருகின்ற விழாக்காலங்கள், கோவில் நிகழ்வுகள், அரசு நிகழ்வுகள் என்று மக்கள் மொத்தமாய் கூடும் நிகழ்வுகளுக்கும், பண்டிகை தினங்களுக்கும் … Read more

ஏழு வருடத்திற்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரருக்கு கிடைத்திருக்கும் சதம்

இந்தியா – இங்கிலாந்திற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார் இந்திய வீரர் கே எல் ராகுல். இது லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு வருடங்களுக்கு பிறருக்கு ஒரு இந்திய வீரருக்கு கிடைக்கும் சதம் ஆகும். பொதுவாகவே லார்ட்ஸ் மைதானம் என்பது ‘Mecca Of Cricket’ என்று எல்லோரோலும் அறியப்படும். அங்கு சதம் அடித்தால் ஒரு மிகப்பெரும் பெருமையாகவே கொள்ளப்படும். கடைசியாக இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே 2014-இல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் … Read more

52 கோடியை கடந்து விட்டது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – இந்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் 52 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. ஒன்றிய அரசு அளித்த 54.04 கோடி தடுப்பூசிகளுள் மாநில மற்றும் யூனியன் பிரேதசங்கள் 52.36 கோடி தடுப்பூசிகளை முழுமையாக உபயோகித்து இருப்பதாகவும் 2.5 கோடி தடுப்பூசிகளை மிச்சம் வைத்திருப்பதாகவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்களுள் முதல் ஐந்து இடங்களை உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா,குஜராத்,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பிடிக்கின்றன. உலக அளவில் அதிகபட்ச தடுப்பூசி செலுத்திய நாடுகளுள், … Read more

அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் பலி

அல்ஜீரியாவின் கைபல் பிராந்தியந்தில் தொடங்கிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து பல்வேறு இடத்திற்கும் பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் அந்நாட்டில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் அமற்றப்பட்டு வருகின்றனர். வெப்ப நிலையும் 50 டிகிரி செல்சியசை அல்ஜீரியாவில் தொட்டுள்ளதால் காட்டுத்தீயை அணைப்பதில் … Read more