இனி காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு – டி.ஜி.பி சைலேந்திர பாபு

பணிச்சுமை, மன அழுத்தம் ஆதியவற்றை இலகுவாக்கவும், உடல் நலனை பேணிக்கொள்ளவும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. தொடர்ந்து குற்றவாளிகளோடும் மன அழுத்தங்களோடும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டு குடும்பங்களைக்கூட கவனித்துக்கொள்ள முடியாமல் பணியின் பிடியிலேயே இருக்கும் காவலர்கள் இனி வாரம் ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார் சைலேந்திர பாபு. பிறந்தநாள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றிற்கும் விடுமுறை கேட்பின் கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. இத்தோடு வாராந்திரவிடுப்பு எடுக்க … Read more

காலிறுதிக்கு தகுதி பெறுமா இந்திய மகளிர் ஹாக்கி அணி? – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கில் போராடி வென்றது. வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீராங்கனை வந்தனா ஹாட்ரிக்கோல்கள் அடித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை … Read more

கோல்டன் ஸ்லாமை தவற விட்ட ஜோகோவிச் – ஒலிம்பிக் 2020

உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றுள்ளார். கோல்டன் ஸ்லாமை வெல்லுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் 1-6,6-3,6-1 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றார். ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள் மற்றும் கோல்டன் கிராண்ட்ஸ்லாம் (ஒலிம்பிக் தங்கம்) என்ற சாதனையை 32 வருடங்களுக்கு முன்பு புரிந்த ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை இந்த ஒலிம்பிக்கில் … Read more

ஆகஸ்ட் இறுதியில் கொரோனோ மூன்றாம் அலை…?

உருமாறிய கொரோனோ ரகமான டெல்டா வைரஸ் மற்றும் டெல்டா பிளஸ் தற்போது வேகமாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் பரவி வருகின்ற நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மறுபடியும் உயர்ந்து வருகின்ற கொரோனோ தொற்று மாநில மத்திய அரசுகளிடேயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு சிலருக்கும் நோய் தொற்று … Read more

முதல் ஒலிம்பிக்கிலேயே இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லோவ்லினா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா, சீன தைபேயின் நின்-சின் சென்-ஐ 4-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லோவ்லினாவும், சீன தைபேயின் நின்-சின் சென்-ஐயும் மோதினர். தொடக்கம் முதலே தனது முழு ஆக்ரோசத்தையும் காட்டிய லோவ்லினா 30-27,29-28,28-29,30-27,30-27 என்ற புள்ளிக்கணக்கில் நின்-சின் சென்-ஐ வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 23 வயதே ஆன … Read more

அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் காலிறுதியில் ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்ட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அவரை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொறு பதக்கத்தை உறுதி செய்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-13,22-20 என்ற நேர் செட்கணக்கில் யமகுச்சியை எளிதாக வீழ்த்தினார். இதன் மூலம் அரையிறுதிக்கு … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு மூன்றாவது அலை நெருங்குகிறதா….?

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த தினசரி கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை  தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் மூன்றாவது அலை நெருங்குகிறதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555 ஆக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் தொற்று பாதிப்பு இருபத்தி இரண்டாயிரத்தை … Read more

ஹசரங்காவின் மேஜிக்கல் சுழலில் வீழ்ந்தது இந்திய அணி…!

இந்தியாவுடனான மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தங்களது தொடர்ச்சியான ஐந்து T20 சீரிஸ் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சணக்கா தலைமையிலான இளம் இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடியது. ஒரு நாள் தொடரை ஏற்கனவே வென்றிருந்த இந்திய அணி T20 தொடரை 1-2 என்ற கணக்கில் நழுவ விட்டது. தொடரின் … Read more

நூலிலையில் தோல்வியை தழுவிய மேரிகோம் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 51 கிலோ மகளிர் குத்துச்சண்டை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில்  பதக்க பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வியைத் தழுவினார் ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம் ஏற்கனவே இதை தனது கடைசி ஒலிம்பிக் என்று அறிவித்திருந்தார். எப்படியேனும் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை பெற்று தந்துவிட்டு விடை பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் கொலம்பியாவின் இன்கிரிட் வெலன்சியாவுடன் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 2-3 என்ற கணக்கில் … Read more

Pandian Stores Kathir Kumaran leaving the show? | 2nd February 2021 Episode Prediction

  Pandian Stores in Vijay TV is one of the highest TRP serials in Tamil now. Recently, VJ Chithra who played the pivotal role \”Mullai\” passed away due to suicide and is mourned by fans till day.  Currently, Kaavya Arivumani plays the role of Mullai and on the recent 1st February 2021, we could see … Read more