100 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினர்!

Hamas Rulers Kidnapped Over 100 People In Israel 1200 Dead With In 48 Hours Idamporul

குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களிடையேயான போர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், ஒரு பக்கம் குழந்தைகள் உட்பட 100 இஸ்ரேலியர்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்து இருக்கின்றனர் ஹமாஸ் அமைப்பினர். இன்னொரு பக்கம் இலட்சக்கணக்கில் பீரங்கிகளையும் ஆயுதங்களையும் இறக்கி தரை வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது இஸ்ரேல். “ கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் போர் தாக்குதலாம் ஆயிரத்து நூற்றுக்கும் … Read more

தனது சம்பளத்தை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் கொடுத்த ராஷித்!

WC 2023 Rashid Khan Donated His Salary To Afghanistan Earth Quake Victims Idamporul

தனது சம்பளத்தை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்து இருக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஷித் கான். ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இயற்கே பேரிடர் வேறு அங்கு வசிக்கும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலககோப்பையில் தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை ஆப்கானிஸ்தானில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஷித் முன்வந்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” அவ்வப்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தன்னால் முடிந்த … Read more

இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசிய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு!

Hamas Launches 7000 Rockets In To Israel Fact Here Idamporul

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு 7000 ராக்கெட்டுக்களை சரமாரி வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்று இருக்கின்றனராம். பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. “ ஹமாஸ் அமைப்பினர் … Read more

Asian Games | Final | IND v AFG | ‘தங்கம் வென்றது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி’

Asian Games 2023 Indian Cricket Team Won Gold Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியன் கேம்ஸ் இறுதிப்போட்டி மழை காரணமாக கால்டு ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அணிக்கு கோல்டு அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து சில்வரை பகிர்ந்து கொண்டன. வங்கதேச அணி வெண்கலத்தை வென்றது. “ ஆசியன் கேம்ஸ்சின் வழக்கத்தை விட இந்தியாவின் ஆதிக்கம் இந்தமுறை அதிகமாகவே இருந்தது. 107 மெடல்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் … Read more

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain Possibilitis For Next 4 Days In TamilNadu 07 10 23 Idamporul

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது. “ இந்நேரமே ஒரு 10 சதவிகித மழை பொழிந்து இருக்க வேண்டும் தமிழகத்தில், ஆனால் … Read more

TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது வட்டார போக்குவரத்து அலுவலகம்!

TTF Vasan Driving License Banned For 10 Years Idamporul

TTF வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது வட்டார போக்குவரத்து அலுவலகம். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மோட்டார் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் TTF வாசன். தொடர்ந்து பலரும் வாசனை பின் தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 2033 வரை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம். “ ஏற்கனவே மெட்ராஸ் … Read more

காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்றவறுடன் செல்பி எடுத்த போலீஸ், சர்ச்சையாகும் போட்டோ!

Police Take Selfie With Murderer Idamporul

திருநெல்வேலியில் காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக்கொன்றவருடன் போலீஸ் எடுத்த செல்பி சர்ச்சையாகி வருகிறது. திருநெல்வெலியில் காதலிக்க மறுத்த சந்தியா(18) என்ற பெண்ணை, ராஜேஷ் கண்ணன்(17) என்ற சிறுவன் அவர் வேலை பார்க்கும் கடைக்குள்ளேயே சென்று வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுவனை தேடி கைது செய்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. “ கொலை செய்தவருடன் போட்டோ எடுத்து விட்டு அதை பொதுவெளியில் … Read more

உக்ரைன்: ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் 8 வயது சிறுவன் உட்பட 51 பேர் பலி!

Russian Air Strikers Kills 51 People In Ukraine Idamporul

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், உக்ரைனின் ஹ்ரோஷா பகுதியில் 8 வயது சிறுவன் உட்பட 51 பேர் பலியாகி இருக்கின்றனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால், 8 வயது ஆன சிறுவன் உட்பட 51 பேர் உக்ரைனில் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்கிவ் நகரின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹ்ரோஷா என்னும் கிராமத்தில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. ராணுவ பகுதிகள் அல்லாத சிவில் இடத்தில் ரஷ்யா தாக்குதலை நிகழ்த்தி இருப்பதற்கு உலகநாடுகள் கண்டனம் … Read more

Asian Games | SF 1 | ‘வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asian Games SF 1 IND VS BAN India Won By 9 Wickets Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது அரையுறுதியில் வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய வங்க தேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தாலும் கூட, ருதுராஜ் 40(26) மற்றும் திலக் வர்மாவின் 55(26) அதிரடியால் 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. “ தங்கத்தை அடைய இன்னும் ஒரு … Read more

நட்சத்திர வீரர் கில்லுக்கு டெங்கு பாதிப்பு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!

WC 2023 Subhman Gill Suffering From Dengue Fact Here Idamporul

இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மான் கில் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அக்டோபர் 8 அன்று ஆடும் முதல் உலககோப்பை லீக் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. “ சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் … Read more