முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக நியூசிலாந்து பறக்க இருக்கும் பும்ரா!

Bumrah Likely To Fly Newzealand For His Suregery Idamporul

முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா நியூசிலாந்து பறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படுபவர் ஜஸ்ப்ரீட் பும்ரா. நீண்ட நாளாகவே முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா பெரும்பாலான முக்கிய தொடர்களை புறக்கணித்து வருகிறார். தற்போது அதன் சிகிச்சைக்காக நியூசிலாந்து வரை பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ சிகிச்சை முடித்து விட்டு நேராக ஐபிஎல் போட்டிகளில் பும்ரா கலந்து கொள்ள … Read more

AUS vs IND | 3rd Test | ‘முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை’

IND VS AUS 3rd Test Day 1 Australia Lead By 47 Runs Idamporul

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 109 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் குஹ்னிமென் 9 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் எடுத்து 47 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. … Read more

போலி டாக்டர் பட்டம், பிரபலங்களையே ஏமாற்றி மோசடி செய்த கும்பல்!

Fake Anna University Doctorate For Famous People Idamporul

டாக்டர் பட்டம் கொடுப்பதாக போலியாக ஒரு நிகழ்ச்சி வைத்து பிரபலங்களையே மோசடி செய்து இருக்கிறது கும்பல். அண்ணா பல்கலைகழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் கொடுப்பதாக கூறி, வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன மாஸ்டர் சாண்டி உள்ளிட்டோரையும், ஒரு நீதிபதியையும் நிகழ்ச்சிக்கு அழைத்து ஒரு போலி பட்ட நிகழ்ச்சியையே அரங்கேற்றி இருக்கிறது ஒரு மோசடி கும்பல். இது பொய் என புலப்படவே இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. “ நிகழ்ச்சியில் நீதிபதியையே … Read more

இந்திய எல்லையில் பறந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

Unmanned Aerial Vechile Flying Over Indian Border Idamporul

இந்திய எல்லையில் பறந்த ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய எல்லையில் அத்து மீறி பறந்த ஆளில்லா ட்ரோன்கள் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுத்து வீழ்த்தப்பட்டது. ட்ரோன்கள் இந்திய எல்லையில் மட்டும் அல்லாது பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லையில் பறந்து நோட்டமிட்டதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ வளர்ந்த நாடுகள் அதற்கு கீழ் இருக்கும் நாடுகளை இது போல ஆளில்லா ட்ரோன்களை அனுப்பு உளவு பார்ப்பது … Read more

IND vs AUS | 3rd Test | ‘உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை எட்டுமா இந்தியா?’

IND VS AUS 3rd Test Starts Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று காலை துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் இன்று காலை 9:30 மணி அளவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை அடைந்து விடும். “ இந்த ட்ராக்கும் ஸ்பின்னுக்கே அடிபடும் என்பதால் எந்த அணி … Read more

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Rain in Tamil Nadu 01 03 2023 Idamporul

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்து இருக்கிறது. தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்து இருக்கிறது. “ சில நாட்களாகவே தாங்க முடியாத வெயில் தகித்து வந்த நிலையில் … Read more

NZ vs ENG | 2nd Test | ’ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து’

ENG V NZ Second Test New Zealand Won By 1 Runs Idamporul

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது நியூசிலாந்து. முதலில் ஆடிய இங்கிலாந்து வழக்கமான அதிரடியை கையில் எடுத்து 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த்து. அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து 209 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆகி மறுபடியும் விளையாடி 483 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தே வெற்றி பெறும் என்ற நிலை இருந்திருந்தாலும் வேக்னரில் அதிரடி பந்து வீச்சால் 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து … Read more

மேகாலாயாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு!

Earth Quake In Meghalaya 3.9 Jolts Idamporul

மேகாலாயாவில் அடுத்தடுத்து குறுகிய இடைவெளிகளில் இரண்டு நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே பூமி தட்டுகள் உரசும் இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்படுபவது வழக்கம். அந்த வகையில் மேகாலாயாவில் இன்று குறுகிய இடைவெளிகளில் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக பேரிடர் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. “ ஆயுதங்கள் வைத்து உலகநாடுகள் ஒன்றுக்கொன்று மிரட்டிக் கொண்டு வரும் நிலையில், ஒட்டு மொத்த … Read more

புதின் விரைவில் அவருக்கு நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் – செலன்ஸ்கி

Zelensky Ukraine President Idamporul

புதின் விரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் கூறி இருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய அதிபருக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையே தற்போது வார்த்தை போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் வெகுவிரைவில் அவரது நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவார் என்று செலன்ஸ்கி தற்போது கூறி இருப்பது அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்து இருக்கிறது. “ உக்ரைன் தொடர்ந்து பல்வேறு … Read more

TNPSC Group 2 மெயின்ஸ் எக்சாமில் குழப்பம், மறுதேர்வு குறித்து ஆலோசனையா?

TNPSC Group 2 Mains Reexam Plan Idamporul

TNPSC குரூப் 2 மெயின்ஸ் எக்சாமில் நடந்த குழப்பத்தால் பல்வேறு தரப்பினரும் ஆணையத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த குரூப் 2 மெயின்ஸ் எக்சாமில், வருகைப் பதிவேட்டில் உள்ள பதிவெண்ணும், வினாத்தாளில் உள்ள பதிவெண்ணும் வேறு வேறாக இருந்ததால் பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான தேர்வர்கள் விரக்திக்கு உள்ளானதால் ஆணையம் மீது கண்டனங்கள் குவிந்து வருகிறது. “ ஒரு சில தேர்வர்கள் இந்த குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வெளியில் சென்று … Read more