பான் மற்றும் குட்காவிற்கான தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

Ban On Paan And Gutka Revoked Idamporul

பான் மற்றும் குட்காவிற்கான தடையை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். உணவுதர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பான் மற்றும் குட்கா தடைசெய்யப்பட்டு அதை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பான் மற்றும் குட்கா உணவுதரக்கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, தடைக்கு உணவுதர பாதுகாப்பின் கீழ் எந்த சட்டங்களும் இல்லை. ஆதலால் இந்த தடையை ரத்து செய்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. “ கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை மாந்தர்களுள் விதைத்திடும் … Read more

நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!

IND VS NZ 3rd ODI India Won By 90 Runs Idamporul

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இருக்கிறது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது. “ மூன்று போட்டிகளிலும் … Read more

திடீர் மின்தடையால் இருளில் மூழ்கியது பாகிஸ்தான்!

Pakistan Electric Shutdown Idamporul

மின்பற்றாக்குறையால் முழு மின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுக்க இருளில் மூழ்கி கிடைக்கிறது. மின்பற்றாக்குறையால் பாகிஸ்தானில் முழுமின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் இருளில் தத்தளிக்கின்றன. பொருளாதார சிக்கல்கள், மின் தடை, ரயில் சேவை நிறுத்தம் என்று பாகிஸ்தான் பல்வேறு பிரச்சினைகளால் ஸ்தம்பித்து நிற்கிறது. “ திட்டமிடப்படாது தொடர்ந்து அரசை வழிநடத்தும் தலைமைகளே பாகிஸ்தானின் இந்த நிலைமைக்கு காரணம் என்று எதிர்கட்சிகள் ஆளும் அரசை வஞ்சித்து வருகின்றன “

IND vs NZ | 3rd ODI | ‘ஆறுதல் வெற்றியையாவது அடையுமா நியூசிலாந்து?’

IND VS NZ 3rd ODI Starts Tomorrow Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா நாளை இந்தூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இது நியூசிலாந்து அணிக்கு ஒயிட் வாஷ் நிகழ்வா இல்லை ஆறுதல் வெற்றியா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். “ சிறிய தொடர்களில் சொதப்புவது போல காண்பித்து கொண்டு, பெரிய தொடர்கள் … Read more

IND vs NZ | 2nd ODI | ’8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND VS NZ 2nd ODI India Won By 8 Wickets Idamporul

நியூசிலாந்து எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் இரண்டாவது போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு இந்திய பவுலர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சு முழு காரணமாக அமைந்தது. “ சிறப்பாக பந்து வீசிய ஷமி 6 ஓவர்கள் வீசி வெறும் 18 … Read more

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது!

IND VS NZ 2nd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் சுப்மான் கில் அவர்களின் இரட்டை சதத்துடன் வெற்றியை பதித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் இந்திய அணி மும்முரமாக இருக்கிறது. “ இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணியும் தனது பங்குக்கு … Read more

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவியில் இருந்து விலகல்!

NZ Prime Minister Jacinda Announced Her Resigning Idamporul

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவியில் இருந்து விலகியது அங்கிருக்கும் அரசியலில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. லிபரல் லேபர் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று கடந்த 2017 அன்று பிரதமராக பொறுப்பேற்றவர் ஜெசிந்தா ஆர்டன். ’ஒரு சில பொறுப்புகளை நான் சரியாக செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன், இது தான் நான் பதவி விலக சரியான நேரம்’ என்ற வார்த்தைகளை கூறி தனது பதவியை நாட்டிற்காக அர்ப்பணித்து இருக்கிறார். “ ஒரு பெரும் தலைவர் தனது … Read more

IND vs NZ | 1st ODI | ‘சுப்மான் கில்லின் அதிரடி இரட்டை சதத்தால் வீழ்ந்தது நியூசிலாந்து’

IND VS NZ 1st ODI India Won By 12 Runs Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி சுப்மான் கில் 208(149) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு நியூசிலாந்து அணியின் ப்ரேஸ்வெல்லும் 140(78) அதிரடி காட்டவே திரில்லராக சென்ற போட்டி ஒரு கட்டத்தில் தாகூர் பந்தில் அவர் அவுட் ஆனதும் வெற்றி இந்தியா வசம் திரும்பியது. “ வெற்றி பெற்று விட்டாலும் … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்!

Gayathri Raghuram Challenged To BJP Tamilnadu Leader Annamalai Idamporul

காயத்ரி ரகுராம் அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஒரு சவாலை முன்வைத்து இருக்கிறார். சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரியாக விமர்சித்து வருகிறார். ’நான் ஈரோடு இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து நிற்கிறேன், தைரியம் இருந்தால் எனக்கு எதிராய் நின்று வென்று காட்டுங்கள் பார்க்கலாம்’ என சவாலும் விடுத்து இருக்கிறார். “ தொடர்ந்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளும் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பதாகவே இருந்து வருகிறது. … Read more

கொரோனாவை அடுத்து மிரட்டும் பன்றி மற்றும் பறவை காய்ச்சல்!

Swine Flu Spreading Fast In Kerala Idamporul

இன்னும் கொரோனாவே ஓயாத நிலையில் அடுத்ததாக பன்றி மற்றும் பறவை காய்ச்சல் தேசத்தை தொற்றிக் கொண்டு இருக்கிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு இருந்த 3600-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கேரளாவை அடுத்து அருகில் இருக்கும் தமிழகத்திலும் இது பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையில் பாதுகாப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. “ மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்றாலும் உருமாறிய வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை … Read more