பாலியல் சர்ச்சை வீடியோ – பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

KT Raghavan allegations

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த கே.டி.ராகவன், இது முழுக்க முழுக்க பொய்யான பிரதி வீடியோ என்றும் இதை சட்ட ரீதியாக முறையாக எதிர் கொள்ள போவதாகவும் அதுவரை தன்னுடைய பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்து கொள்வதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். பிரபல யூடியூபர் ஒருவர், பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சையான பாலியல் வீடியோ ஒன்றை இணையத்தில் … Read more

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள்!

சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் ஆப்கன் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் ஆப்கனின் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தி தளம் தனது இணையதளத்தில் அறிவித்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த அமெரிக்க படை ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் … Read more

ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணங்களாய் தலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது தலைநகர் காபூலை குறி வைத்து நகர்ந்து வருவதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆப்கன் படைகளின் அசைக்க முடியாத நகராக கருதப்படும் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் இறங்கி உள்ளனர். ஆப்கன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வரும் நிலையில், ஆப்கன் படைகள் எதிர்த்து போராடினாலும் தாக்குப்பிடிக்க முடியாது நிலைகுலைந்த … Read more

பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு … Read more

1 யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பு, 1 கி.மீ பேருந்து பயணத்திற்கு 59.15 ரூபாய் இழப்பு – வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் அரசுப்பேருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் 59.15 ரூபாய், போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தலா 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், தமிழகத்தில் மின்சாரத்துறைக்கு ரூபாய் இரண்டு … Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2,63,976 கடன் – வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ரூபாய் 2,63,976 கடன் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்த வெள்ளை அறிக்கையில்  தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு மூல தன பொருள்களையும் திட்டங்களையும் உருவாக்குவதற்கு ஆக்கிய செலவை விட அரசை நடத்துவதற்கு உபயோகித்த செலவே அதிகம். அதுவே இத்தகைய நிதிச்சுமைக்கு தமிழகத்தை ஆளாக்கியதாக நிதி அமைச்சர் இதற்கு முந்தைய அரசை சாடியுள்ளார். இதற்கு முந்தைய அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் விட்டதாலும், … Read more

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, 433ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது, அதே சமயம் 14 ஆண்டுகள் தண்டனை முழுமை பெறாத கைதிகளை கருணையின் … Read more