பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு சென்னை நீதிமன்றம் நூதன தண்டனை!

Illegal Bike Racer Punished By Court In Different Manner

சென்னையில் பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு நூதன முறையில் தண்டனை விதித்து இருக்கிறது சென்னை நீதி மன்றம். ரேஸ் செய்கிறோம் சாகசம் செய்கிறோம் என்று அவர்களின் உயிரையும் மதிக்காமல், எதிர் வருபவரின் உயிரையும் மதிக்காமல் தெனாவட்டு காட்டிய இளைஞர் ஒருவருக்கு சென்னை நீதிமன்றம், 1 மாதம் முழுக்க ஸ்டேன்லி மருத்துமனையின் அவசர விபத்து சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக பணியாற்ற சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. “ ரேஸ் செய்பவர்கள் ஒவ்வொருவரையும் இப்படி பிடித்துப்போட்டு வார்டு … Read more

பிரபல இணையவாசி இர்பானின் யூடியூப் பக்கம் அதிரடியாக நீக்கம்!

Famous Youtube Channel Ifrans View Has Terminated From Youtube

பிரபல இணையவாசி இர்பானின் யூடியூப் பக்கமான ’Irfan’s View’ என்ற சேனல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இணையவாசியாக கருதப்படும் இர்பான் யூடியூப் மூலம் பெரிதாக பிரபலமானவர். அவரது பக்கமான ’Irfans View’ என்ற சேனலை இங்கு அறியாதோர் யாரும் இலர். அந்த அளவிற்கு பிரபலமானவரின் ஒரு யூடியூப் சேனலை, பாலிசிகளை மீறியதாகச் சொல்லி ஒரே அசைவில் தூக்கி இருக்கிறது யூடியூப் நிறுவனம். “ என்ன காரணம் என்பதை அவரே முன்வந்து சொன்னால் … Read more

துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6,100 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

MK Stalin At Dubai International Expo

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6,100 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் மாநாட்டில் 6,100 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடு, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தின் மீதும் தமிழக அரசின் மீதும் நம்பிக்கை கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு … Read more

பெருகும் லோன் செயலி மோசடி, சிக்கித் தவிக்கும் பொது மக்கள்!

Loan App Frauds Are Increasing In TamilNadu

லோன் செயலி மூலம் பணம் கொடுப்பது போல கொடுத்து விட்டு அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தினாலும் கூட தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்யும் நிலை பெருகி வருகிறது. சென்னையில் ஒரு இளம் பெண் ஒரு அவசர தேவைக்காக, பியோனி கேஷ் என்ற செயலி மூலம் 12,000 லோன் எடுத்து இருக்கிறார். அதை குறிப்பிட்ட காலத்தில் கட்டிய போதும் கூட கட்டவில்லை என்று ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி தற்கொலை எண்ணத்திற்கு போகும் அளவிற்கு தூண்டி … Read more

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயரும் இலங்கைத் தமிழர்கள்!

Sri Lanka Under Economic Emergency People moving To Other Country

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் தொடர்ந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இலங்கை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை எல்லாம் அங்கு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வாழ்வினை சமாளிக்க முடியாத பலரும் தோணிகளின் வாயிலாக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். “ ஒரு சிலிண்டரின் விலை நான்காயிரம், அதற்கும் கூட பெரிய தட்டுப்பாடு, மக்கள் தினமும் அத்தியாவசிய பொருள்களுக்கே … Read more

திருநங்கைகளுக்கு கல்வி கட்டணம் இல்லை -சென்னை பல்கலைக் கழகம்

University Of Madras

திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்ளும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. ஒரு புறம் மூன்றாம் பாலினத்தரான திருநங்கைகளை தரத்தில் உயர்த்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், கல்வியில் அவர்கள் பின் தங்கியே இருக்கின்றனர். இந்த நிலையில் திருநங்கைகள் படிக்க முன்வந்தால் அவர்கள் கல்விகட்டணம் செலுத்த தேவையில்லை என்று சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ நிச்சயம் இந்த அறிவிப்பு ஒரு சிறந்த … Read more

முகநூல் காதலிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட விழுப்புரம் இளைஞர்!

Facebook Love Villupuram Boy Commit Sucide

பேஸ்புக் காதலி இதய நோயால் உயிரிழந்ததை அறிந்த முகநூல் காதலன் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சோகம். விழுப்புரம், ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முகநூலில் முகம்பார்க்காமல் ஒரு பெண்ணை காதலித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் இதயநோயால் இறந்து விடவே, மனமுடைந்து போன மணிகண்டன் (26) விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார். “ முகம் பார்க்காமல் காதல் செய்து வந்த ஒரு காதலிக்காக, ஒரு இளைஞர் உயிரை மாய்த்து … Read more

உள்ளாட்சி தேர்தல் | ‘வாக்களிக்காத அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன்’

Tamilnadu Local Body Election 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்த நிலையில், எப்போதையும் விட மிகக்குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் பதிவாகும் வாக்குகளை விட இந்த முறை பெரிதும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, திரிஷா உட்பட பெரிய பெரிய நடிகர்களும் பெரிதாக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. “ நடிகர் விஜய் அவர்கள் நீலாங்கரை வாக்குச்சாவடியில் … Read more

தேர்வாளர்களுக்கு ஒரு குட் நியூஸ், TNPSC Group 2/2A-விற்கான அறிவிப்பு வெளியானது!

TNPSC Group 2 2A Exam Date Announced

TNPSC தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. குரூப் 2 /2A-விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. TNPSC Group 2/2A-விற்கான தேர்வு அறிவிப்பை தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆன்லைன் அப்ளிகேசன் ஓபன் ஆகும் தேதி பிப்ரவரி 23, தேர்வு நடைபெறும் தேதி மே 21 எனவும், இன்டர்வியூ அல்லாத குரூப் 2A தேர்வுகளுக்கு டிசம்பர் மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவித்து இருக்கிறது. ” இன்றிலிருந்தே படிக்க துவங்குகள், இன்றில் இருந்தே முயற்சியை … Read more

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்

Neutrino Project Cannot Be Allowed In Tamilnadu TN Govt

உயிரிய சூழலை பாதுகாக்கும் நோக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. தேனியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2018-இல் டாடா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் மையம் அனுமதித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்காடி வரும் நிலையில், உயிரிய சூழலை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. புலிகள் உள்ளிட்ட பல்வேறு … Read more