தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ மழை பதிவு!

Srivaikundam Dam

நேற்றைய தினத்தில் (29-10-2021) தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி இருக்கிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ, கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையில் 17 செ.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. ஒவ்வொரு மழையிலும் அணை நிரம்புகிறது. தாமிரபரணி நீர் திருவைகுண்டம் தடுப்பு … Read more

கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,039 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 30 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 1,039 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,083 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று மட்டும் தமிழகத்தில் 1,229 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் மீட்பு விகிதம் 98.22 ஆக உள்ளது. … Read more

வானிலை நிலவரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை!

Orange Alert Declared In Various Parts Of TamilNadu

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு, மெதுவாக மேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகரிப்பதால், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “ பேரிடர் … Read more

கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 28 10 2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,060 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,315 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். குறைந்து வரும் தொற்று, பெருகி வரும் மீட்பு விகிதம் … Read more

கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் இன்று மட்டும் 1,090 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 26 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,090 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1,326 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.62 கோடியாக உயர்ந்து இருக்கிறது. … Read more

தொடங்கியது வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

North East Monsoon Starts In TamilNadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கிட்டதட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது. தென் வங்கக்கடலின் மத்தியபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்னும் 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என்று தமிழக மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கியுள்ள நிலையில், … Read more

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் – தமிழக அரசு

TN School Reopening Again Post Poned

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 அன்று பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பிறகு, 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள், நவம்பர் 1 அன்று திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. பள்ளிகளை சீரமைக்கும் பணிகள், துப்புரவு செய்யும் பணிகள் சில நாட்களாக தமிழகம் … Read more

விழா காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் – போக்குவரத்து துறை

If Private Bus Charges More In Festival Occasion Action Will Be Taken TN Transport Minister

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்து விட்டால், தனியார் பேருந்துகள் கட்டணத்தை கூட்டி விடுவது தமிழகத்தில் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இனிமேல் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் பெயரை சொல்லி … Read more

எல்லை மீறும் இலங்கை கடற்படையின் அராஜகம், மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

Sri Lankan Navys Anarchy One More TN Fisher Man Killed

இலங்கை கடற்படையினர், தொடந்து அராஜக செயலுடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருவது வழக்கமாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ராஜ் கிரண்(30), சுகந்தன்(23), ஆரோக்கிய சேவியர்(32) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக நடுக்கடலுக்குள் சென்ற போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை இடித்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் அவர்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து கடலில் குதித்த ராஜ்கிரண் சம்ப இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. சுகந்தன் மற்றும் ஆரோக்கிய … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,179 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 19 10 2021

இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1,179 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை மாநிலத்தில் 35,928 ஆக உயர்ந்திருக்கிறது. இது போக தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,407 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் புதிய தொற்று வெகுவாக … Read more