தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் 4.33 கோடியை எட்டியுள்ளது!

Vaccination In TamilNadu Reached 4.33 Crores

தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் 4.33 கோடியை எட்டியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 4.33 கோடி தடுப்பூசி விநியோகத்தை எட்டி இருக்கிறது தமிழகம். இதில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 3.41 கோடி பேராக இருக்கிறார்கள். இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 94.31 லட்சம் பேராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “ தமிழகத்தில் வரும் அக்டோபருக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைத்து நபர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு … Read more

தமிழக அரசை கேள்வி எழுப்பும் ட்விட்டர் ’ஹேஸ்டாக்’!

Why TamilNadu Not Participated At All In GST Council Twitter Trends

தமிழக அரசை கேள்வி எழுப்பும் விதமாக ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்ற சூழலில் அதற்கு தகுந்த காரணம் கேட்டு ஒரு தரப்பினர் ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலான மாநில வருவாய் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் வரிகளின் … Read more

222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்: ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவை பெறப்போகும் தமிழகம்

222 Oxygen Generators Will Be Placing Over The Tamilnadu

தமிழகத்தில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அதில் 172 இடங்களில் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மீதி பணிகளும் முடிந்து விட்டால் தமிழகம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுவிடும் என்றும் தனது அறிக்கையில் கூறி உள்ளார். இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் தேசத்தில் பல்வேறு உயிர்களை மருத்துவமனையிலேயே துடி துடிக்க வைத்தன. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல. … Read more

தமிழகத்தில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது!

Mega Vaccination 2.0 Reached 15 Laksh People In TamilNadu

முதல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 28 லட்சம் பேரை சென்றடைந்த நிலையில், தமிழக அரசு செப்டம்பர் 19 அன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமை அறிவித்திருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட படி தமிழகம் முழுக்க நடைபெற்ற இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம்களில்கிட்ட தட்ட 15 லட்சம் பேர் கலந்து கொண்டு தடுப்பூசியின் பயனை அடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 4.3 கோடியைக் கடந்து இருக்கிறது. இதில் முதல் தவணை மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,669 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 18 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் புதியதாக 1,669 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,565 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பில் இரண்டாவது மாபெரும் தடுப்பூசி … Read more

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வர தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு!

Most Of The States In India Opposing Petrol Diesal Under GST In GST Council

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. நிதி இழப்பை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் திட்டத்தை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை காட்டி வருவதால் அந்நோக்கம் தற்போதைக்கு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வரும் பெட்ரோல், … Read more

பாலின சமத்துவத்தை மீறுவதாய் அமைகிறதா 40% மகளிர் இட ஒதுக்கீடு!

Is That Gender Inequality Exists In 40 Percent Women Reservation In TN Goverment Jobs

தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், அரசு வேலைகளில் இதுவரை 30 சதவிகிதகமாக இருந்த மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்தே சமூகவலை தளங்களில் ஒரு பக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்த வண்ணம் இருந்தது. இது போக ட்விட்டரில் #JusticeForMenInTNPSC என்ற ஹேஷ்டாக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பொதுவாக அரசு வேலைகளில் மகளிருக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால் அந்த 40 சதவிகிதம் முழுமையாக … Read more

பகுத்தறிவுக் கிழவனுக்கு இன்றோடு வயது 143!

Remembering Periyar On His 143 Birthday

பெரியார் எனப்படும் பகுத்தறிவு கிழவனின் 143-ஆவது பிறந்த நாள் இன்று. சாதியக் கொடுமைகள், மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் என்று தேசம் முழுக்க பரவிக் கிடந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் தன் கைத்தடி கொண்டு பாடம் புகட்டியவர். சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர். எந்த எதிர்ச்சொல்லிற்கும் அடங்கிப்போகாத குணமுடையவர் மாண்புடையவர் தந்தை பெரியார் அவர்கள். பெண்களுக்கு சம உரிமை கேட்டு களத்தில் நின்றவர். மூட நம்பிக்கைகளை வேரறுத்தவர். சாதியிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தன் குரலை முன் வைத்தவர். சுயமரியாதையை விட்டிக் கொடுக்காதவர். … Read more

தமிழகத்தில் நடைபெற இருக்கிறது மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம்!

TamilNadu Mega Vaccination 2.0 Date Announced

ஏற்கனவே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 12 அன்று நடை பெற்ற மெகா தடுப்பூசி முகாமில், 28 லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். இந்த வரவேற்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு வருகின்ற செப்டம்பர் 19, ஞாயிறு அன்று மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் அமைத்திட முடிவெடுத்துள்ளது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

TamilNadu Covid Updates 16 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 29 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. சில நாட்களாகவே பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்படுவது … Read more