தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 12 09 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தொற்றுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,168-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரு நாளில் தமிழகத்தில் குணமாகி வெளியானவர்களின் எண்ணிக்கை 1,512-ஆக உள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 212 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 197 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் 16,473 … Read more

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடம்!

Nilgiris Has Vaccinated 71 Percent Of Its Eligible Population

தமிழகத்தில், தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி மாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை வகிக்கிறது. ஓட்டு மொத்த தமிழகத்தை பொறுத்தவரை, தடுப்பூசிக்கு தகுதியுள்ள வயதினர்களுள் 46 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுள் 12 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால் நீலகிரி மாவட்டம் தகுதியான வயதினர்களுள் 71 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு இன்று … Read more

நீட் தேர்வினால் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் மற்றுமொரு தற்கொலை!

Neet Exam Fear Kills 19 Years Old Student In TamilNadu

சேலம் மாவட்டம் மேட்டுரைச் சேர்ந்த விவசாயியின் மகன் தனுஷ் என்பவர் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூளையூர் என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தான் இந்த தனுஷ் என்பவர். தனது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து … Read more

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில், இரவு 8 மணி நிலவரம் வரை 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,146-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,517 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனோ சம்மந்தப்பட்ட எல்லா செயல்பாடுகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது … Read more

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை – பிரதமர்

Tamil Seat In Banaras Hindu University

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டை தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிக்கை விடுத்துள்ளார். உலகின் மிகத் தொன்மையான மொழியாக கருதப்படும் தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அத்தகைய பெருமை மிக்க தமிழ் மொழியோடு ஊறிப் பிறந்து தேசியப் பற்று படைப்புகளுக்கும், தமிழ்ப் படைப்புகள் பலவற்றிற்கும் வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் உத்திரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 11 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,631 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,119-ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,523-ஆக உள்ளது. தொடர்ந்து கொரோனோவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுக்க … Read more

தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை!

TamilNadu Government Implement Restriction To Fesitival Still 31 10 2021

தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை விதிப்பதாக தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது. நிகழ்ந்து வரும் கொரோனோ சூழலில், மூன்றாம் அலையைத் தவிர்க்க பண்டிகைகள், விழாக்களை கொஞ்ச நாட்களுக்கு துறக்க சொல்லி மத்திய சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடைகளின் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் மீதும் தளர்வுகளை தேடிக்கொண்டே … Read more

தமிழகத்தில் இன்று புதியதாக 1,596 பேருக்கு கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu

தமிழகத்தில் இன்று 9 மணி நிலவரப்படி 1596 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஒரு நாளில் மட்டும் 21 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,094-ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரே நாளில் மட்டும் 1534 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசி செயல்பாடுகளை பொறுத்தவரையில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் … Read more

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் – மு.க.ஸ்டாலின்

CM Announced Porunai Museum Will Be Set Up In Nellai

சட்டபேரவையில் தனக்கு விதித்த நேரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லை மாநகரில் 15 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் என்னும் பெயரில் மாபெரும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வழிவகுக்கப்படும் என்று சட்டபேரவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக நடைபெறும் கீழடி அகழ்வாய்வுகளும் சரி, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாய்வுகளும் சரி, உணர்த்துவது ஒன்று தான் தமிழ் என்னும் நாகரீகம் இங்கு முளைத்த அனைத்து நாகரீகத்திற்கும் மூத்தது. அங்கு கிடைத்த சிதைவுகளையும் … Read more

ஐஐடி சென்னைக்கு தேசிய அளவில் முதல் தர அங்கீகாரம்!

IIT Madras

தேசிய கல்வி தரநிர்ணய வரிசையில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்ட தேசிய கல்வி தரநிர்ணய வரிசையில் ஐஐடி சென்னை நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மருத்துவ கல்லூரி பிரிவில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மூன்றாம் இடத்தையும், சிறந்த கல்லூரிப்பிரிவில் சென்னை லயோலோ கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ” தரம் வாய்ந்த கல்வியை தமிழகம் தேசம் முழுக்க பரப்பி … Read more