தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலைநிறுத்தம் வாபஸ்!

Due To Pongal Holidays TNSTC Strike Called Off Fact Here Idamporul

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலைநிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை தினத்தை ஒட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகத்தார்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் வெகுஜன மக்களை வெகுவாக பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, போக்குவரத்து கழகத்தார்கள் மனமிறங்கி தற்போதைக்கு வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்து இருக்கின்றனர். “ இந்த தற்போதைக்கு என்பது பொங்கல் தின விடுமுறைகள் முடியும் வரைக்கும் தான் எனவும் எச்சரித்து இருக்கின்றனர் தமிழக அரசு போக்குவரத்து … Read more

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

Pongal Gift For All Family Card Said CM Stalin Fact Here Idamporul

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். வருமான வரி செலுத்துவோர், அரசு வேலையில் இருப்போர், சர்க்கரை அட்டைதாரர் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசு ஆயிரம் இல்லை என்ற அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட மக்களிடையே குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், அனைத்து அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு உண்டு என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “ ஏற்கனவே பொங்கல் … Read more

இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீளாத திருநெல்வேலி தூத்துக்குடி கிராமங்கள்!

Thamirabarani Flood Innum Meeladha Gramangal Fact Here Idamporul

தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு திருநெல்வெலி, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்து இருக்கிறது. கடந்த டிசம்பர் 18 அன்று தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கிராமங்கள் மீளாத நிலையில் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிந்த வீடுகள், துண்டிக்கப்பட்ட சாலைகள், இன்னமும் ஆங்காங்கே தெருக்களில் சூழ்ந்து கிடக்கும் வெள்ள நீர், ஆங்காங்கே தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Heavy Rain Possibilities In 11 Districts 06 01 24 Idamporul

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது போக இன்னும் ஒரு சில வட தமிழக பகுதிகளில் மிதமான மழையும் இருக்கும் … Read more

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் திருச்சிக்கு முதலிடம்!

Safest City For Womens 2023 Tiruchy Top In The List Idamporul

ஒட்டு மொத்த இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் தமிழகத்தின் திருச்சி மாநகரம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களுள் திருச்சி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக வேலூர் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. முதல் 10 இடங்களுள் திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 தமிழக நகரங்கள் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான உகந்த … Read more

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டம்!

New Railway Line Near To Kilambakkam Bus Terminal Idamporul

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டம். பெருநகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை கிளாம்பாக்கத்தில் புதியதாக அமைந்து இருக்கும் தென் மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையத்தை மக்களுடன் எளிதாக இணைக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதற்கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இருந்து 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. “ ஒன்றியத்தில் இருந்து நிதியை எதிர்பார்த்துக் கொண்டு … Read more

9 கோடி பயணிகளை எட்டி புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ!

Chennai Metro Rail Services Reaches New Milestone In 2023 Idamporul

சென்னை மெட்ரோ நிறுவனம் கடந்த 2023 வருடத்தில் 9.11 கோடி பயணிகளை அவர்களின் வழித்தடத்தில் கொண்டு சேர்த்து புதிய சாதனை படைத்து இருக்கிறது. 2023 காலக்கட்டத்தில் சென்னை மெட்ரோ நிறுவனம் 9.11 கோடி பயணிகளை அவர்களின் வழித்தடத்தில் கொண்டு சேர்த்து புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. கடந்த 2022 ஆண்டைக் காட்டிலும் 3.01 கோடி பயணிகள் அதிகமாக மெட்ரோவை தேர்ந்து எடுத்து இருக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் மெட்ரோவில் பயணிப்பதாக கூடுதல் தகவல். … Read more

ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம்!

Flood Relief Products Thrown To People In Srivaikundam Idamporul

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம் நிகழ்ந்து இருக்கிறது. மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுக சிறுக மீண்டும் வரும் ஸ்ரீவைகுண்டத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களிடையே தூக்கி வீசப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. நேரடியாக மக்களின் கைகளில் கொடுக்காமல் கூட்டத்தினுள்ளே நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். “ மழை வெள்ளத்தால் வீடுகள் … Read more

தென் தமிழகத்தில் விடாது கொட்டித் தீர்க்கும் மழை!

Tamilnadu Rains South Tamilnadu Will Get Intense Rain Next 48 Hours Idamporul

தென் தமிழகத்தில் கடந்த 12 மணி நேரமாக மழை விடாது கொட்டித் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விட்டு இருக்கும் நிலையில், கடந்த 12 மணி நேரமாக திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் மழை விடாது கொட்டித்தீர்த்து வருகிறது. தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மழையின் அளவு 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக இருக்க கூடும் என்பதால், … Read more

அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

South TN Rains Rain Possibilities For Next Three Days 15 12 23 Idamporul

அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. மழை அறிவிப்பை அடுத்து மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. “ தென் தமிழகத்தில் மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட முன்னெச்சரிக்கை … Read more