அமெரிக்காவில் கிட்ட தட்ட 8 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனோ தொற்று!

Corona Death Tally Reached 8 Laksh In America

அமெரிக்காவில் கொரோனோவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 8 லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அமெரிக்காவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவிகிதமே கொண்டது. ஆனால் உலகளாவிய ஒட்டு மொத்த கொரோனோ உயிரிழப்புகளில் அமெரிக்கா 15 சதவிகிதத்தை தன் வசம் வைத்து இருக்கிறது. அதாவது கொரோனோ பேரிடம் அமெரிக்காவில் கிட்ட தட்ட 8 லட்சம் பேரை காவு வாங்கி இருக்கிறது. “ இன்னமும் அமெரிக்கா கொரோனோவினால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து … Read more

சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் புதிய ரக கொரோனோ வைரஸ்!

Corono Wave Again Rising In China

சீனாவில் மீண்டும் கொரோனோ பாதிப்புகள் கூடி வருவதாக சீனநாட்டின் மருத்துவ அமைச்சகம் கூறி வருகிறது. சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால், மங்கோலிய நாட்டினர் மூலம் இறக்குமதி செய்து வருகின்றனர். இந்த இறக்குமதியில் ஈடுபட்ட மங்கோலிய நாட்டினர் மூலம் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் புதிய ரக கொரோனோ வைரஸ் உருவெடுத்து பெருகி வருவதாக அந்நாட்டி அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ தொற்றால் மீண்டுக் … Read more

இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கும் இலங்கை!

Sri Lanka Seeks 500 USD Loan From India For Fuel Purchase

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக, இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கிறது இலங்கை அரசு. தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் எரிபொருள் தேவைக்காக இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலரை கடனாக கேட்டு நிற்கிறது. இலங்கை பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட எரி பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி … Read more

கூகிள் மென்பொருள் நிறுவனத்துக்கு இன்றோடு வயது 23!

Google Celebrating 23rd Birthday Today

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் ஆன, கூகிள் நிறுவனத்திற்கு இன்று 23 ஆவது பிறந்த நாள். 1998 ஆம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற இருவர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இன்று உலகம் முழுக்க அதிகமாய் உபயோகிக்கும் தேடுதல் பொறியாக வளர்ந்து நிற்கிறது கூகிள். ஓரு நாளில் மட்டும் உலகம் முழுக்க உள்ள 150 மொழிகளில், கூகிளில் 1 பில்லியனுக்கும் மேலான தேடுதல்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் கூகிள் … Read more

உயர்ந்து வரும் உலகளாவிய கொரோனோ தொற்று!

Corono Updates In World 22 09 2021

2019-இல் ஆரம்பித்த கொரோனோ அலை இன்றளவும் ஓயாத நிலையில், உலகளாவிய அளவில் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது கொரோனோ தொற்று! கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகளாவிய அளவில் 3,87,435 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் உலகளாவிய அளவில் 7,324 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்துள்ளது. “ வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா … Read more

ஸ்பெயின் எரிமலை வெடிப்பு: நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிற்கு இரையாக்கிய தீப்பிழம்புகள்!

Spain Volcano Emits Lavas And Destroy Hundreds Of Homes

ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா எனப்படும் தீவில், ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீப்பிழம்புகள், கிட்ட தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தீயிற்கு இரையாக்கி உள்ளன. 5000-ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்ட தட்ட 85,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் அந்த தீவில் சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என்று எங்கு பார்த்தாலும் தீப்பிழம்புகளும், வெண்புகைகளும் ஆர்ப்பரித்து வருகின்றன. சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டினரும் லா … Read more

ஆப்கனில் உள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் கூடாரங்களை தாக்கிய அமெரிக்க ட்ரோன்கள்!

காபூல் விமான நிலையத்தில் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஆப்கனில் உள்ள ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் கூடாரங்களின் மீது வான்வழி தாக்குதல்களை பொழிந்தது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. இது குறித்து … Read more

200 கோடி தடுப்பூசியை செலுத்தி புதிய சாதனை புரிந்திருக்கும் சீனா!

கொரோனோ முதன் முதல் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் கொரோனோ பரவலுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்ட தட்ட 140 கோடி இருக்கும் சீன மக்கள் தொகையினுள் 89 கோடி பேருக்கு இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளது சீனா அரசு. அது மட்டுமில்லாது 200 கோடிக்கும் மேல் தடுப்பூசியை … Read more

உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் கொண்ட நகரங்களுள் சென்னைக்கு மூன்றாம் இடம்!

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள் தமிழகத்தின் சென்னை மாநகரம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள், குறைந்த பட்சம் 2.5 சதுர கிலோ மீட்டருக்குள் 1826 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் டெல்லி முதலிடத்தையும், 1138 சிசிடிவி கேமராக்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும், 609.9 கேமராக்களுடன் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி … Read more

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 72 பேர் பலி,140-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகராக அறியப்படும் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில், அமெரிக்க கப்பற்படை வீரர்கள் 12 பேர் உட்பட 72 பேர் பலியாகி உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாது 140-க்கும் மேற்பட்டோர் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து அங்கு இருக்க விருப்பமில்லாத மக்களும் அங்குள்ள அமெரிக்கர்களும் காபூல் விமான நிலையம் … Read more