அமெரிக்காவையும் தென்கொரியாவையும் எச்சரிக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னின் தங்கை!

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 16 முதல் 26 வரை மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகை நடத்த இருப்பதாக தென்கொரிய பத்திரிக்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே எலியும் பூனையுமாய் திரிகின்ற வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் தற்போது அமெரிக்காவும் புகுந்துள்ளதால் இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.’தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து நடத்த இருக்கிற போர் ஒத்திகை எங்களுடன் போர் புரியவா..? எதற்கும் தயாராக இருக்கிறோம். முன்னேற்பாடுகள் பலமாக இருக்கும். எதிர்வினையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்’ என்று … Read more

பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு … Read more

அடுத்ததாக களம் இறங்குகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ் ’மார்பர்க்’

இரண்டு வருடமாகியும் இன்றளவும் கொரோனோ ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளும் அடுத்த வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. வவ்வால்களிடம் இருந்து மனிதருக்கு பரவும் மார்பர்க் என்னும் வைரஸ் 88 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்தகூடியதாம். இது மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. இது பெரும்பாலும் குகைகளில் வாழும் வவ்வால்களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக அறியப்படுகிறது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கினியாவின் சுற்றுபுறப்பகுதிகளில் மார்பர்க் வைரஸ் தாக்கி … Read more

பூமி என்னும் ஒரு உன்னத கிரகத்தை மனித இனமாகிய நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் – ஐநா

பனிப்பொழிவு,நிலச்சரிவு,தொடர்மழை,ஓயாத அனல்,வெள்ளம், வரலாறு காணாத காட்டுத்தீ என்று எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் ஒரு இயற்கை பேரிடர் இருந்து கொண்டே தான் இருக்கிறது. புதைபடிவ எரிபொருள்கள், பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்தும் சாதனங்கள் இவைகளின் பயன்பாடுகளே இந்த காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் காரணம் என்று ஐநா தனது அறிக்கையில் கூறி உள்ளது. உலக வெப்பமயமாதல் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.ஒரு சூழலில் வறட்சி நிலவினால் மற்றுமொரு சூழலில் பேரிடர் விளைவிக்கும் கனமழை பொழிகிறது. … Read more

தொடர்ந்து ஏழு நாட்களாக கீரிஸ் நாட்டில் எரியும் காட்டு தீ

கீரிஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தீவான ஈவியாவில் உள்ள பிரிஸ்டின் காட்டில் தொடர்ந்து ஏழாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏராளமான நிலப்பகுதிகளையும் வீடுகளையும் விழுங்கிய காட்டுத்தீ காட்டில் உலவி வரும் உயிரினங்களையும் அழித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகிறது கீரிஸ் அரசு. தொடர்ந்து தட்ப வெப்ப நிலை மாறி வரும் கீரிஸ் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 45 டிகிரி செல்சியஸ் … Read more

ஈரான் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ பலிகள்!

இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஓயாத கொரோனோ அலை மறுபடியும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஈரானில் நேற்றைய நிலைப்படி 39,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 546 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் 22,160 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாகவும் 769 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து உலக நாடுகளை பயமுறுத்திவரும் இந்த கொரோனோ என்று தான் ஓய்ந்து இந்த உலகை … Read more

135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ – உலக சுகாதார அமைப்பு

கொரோனோ என்னும் நுண்கிருமியுடன் எப்படி போராடுவது என்று உலகமே விழி பிதுங்கி நிற்கும் இந்த சமயத்தில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ உலகெங்கும் பெருக்க தொடங்கி உள்ளது. இது வரை 135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ பரவத் தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வதென்றே அறியாமல் குழம்பி நிற்கிறது உலக நாடுகள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி கொள்கையை நம்பி இருக்கும் போது … Read more

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் – அமெரிக்கா அறிக்கை

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் என்று உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க புலனாய்வு துறை. உலக நாடுகள் அனைத்தும் சீனாவே கொரோனோவின் பிறப்பிடம் என்று கை காட்டிய போதும் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது சீன அரசு. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனோ தொடர்பான விசாரணையை முழுவதும் அலசி ஆதாரங்களுடம் மூன்று மாதங்களுக்குள் ஒப்படைக்கும் படி அமெரிக்க புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி புலனாய்வு துறை செய்த விசாரணையின் … Read more

2.44 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை விழுங்கிய காட்டு தீ – கலிபோர்னியா

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ கொஞ்சம் கொஞ்சமாக வனம் முழுக்க பரவி தற்போது 2,44,888 ஏக்கர் நிலப்பரப்பினை ஆக்கிரமித்து உள்ளது. சுமார் இரண்டு லட்சத்து நாற்பத்து நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விழுங்கிய இந்த காட்டு தீக்கான காரணம் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்காங்கே அவ்வப்போது எரிந்து எல்லா இடங்களும் பரவுகையில் சுற்றி இருக்கும் கட்டிடங்கள்,கார்கள், மக்கள்வாழும் பகுதிகள், வன உயிரிகள் என்று எதையும் பாரபட்சம் பார்க்காமல் தனக்கு இரையாக்கி கொள்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகள் … Read more

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 910 பேர் கொரோனோவுக்கு பலி

அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனோ அதிகம் பாதித்த நாடாக கருதப்படுவது பிரேசில். நேற்றைய ஒரு நாளில் மட்டும் பிரேசிலில் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆக உள்ளது. சர்வதேச நாடுகளில் மீண்டும் அதிகரிக்கின்ற கொரோனோ தொற்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் புதிதாக தொற்று பாதித்தவர்கள் 37,582 ஆகவும், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆகவும் உள்ளது. இதன் மூலம் பிரேசிலில் மொத்த பலி எண்ணிக்கை 5,56,370 ஆக … Read more