துருக்கி நிலநடுக்கம், பலி எண்ணிக்கை 20,000-க்கும் மேலாக உயர்வு!

Turkey Earth Quake Current Status Idamporul

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டினையே சீர்குலைத்து இருக்கிறது. ஒட்டு மொத்த பலி எண்ணிக்கையும் 20,000-த்தை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாட்டின் அமைச்சகம் கவலை தெரிவித்து இருக்கிறது. “ ஏற்கனவே துருக்கி நிலதட்டுகள் உராயும் பகுதி என அறியப்படுகிறது, கட்டிட மேலாண்மையை துருக்கி … Read more

நிலநடுக்கத்தால் 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்த துருக்கி!

Turkey Earth Quake Update Idamporul

நிலநடுக்கத்தால் துருக்கி 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்து இருப்பதாக பேரிடர் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தின் பெரும் விளைவு மற்றும் தட்டுகளின் மோதல்களால் துருக்கி கிட்ட தட்ட 6 மீட்டர் அளவுக்கு நகர்ந்து இருப்பதாக பேரிடர் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். “ மேலும் இது தொடரவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கருத்து … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் சிக்கி பலி!

Turkey Earth Quake 2500 Death Reported Idamporul

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நடந்த பூகம்ப நிகழ்வுகளால் கட்டிடங்கள், வீடுகள் என பெரும்பாலானவைகள் நொறுங்கி இடுபாடுகளில் மட்டும் சிக்கி கிட்டதட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். மீட்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் பலி எண்ணிக்கை உயரும் என அறியப்படுகிறது. “ இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும் மீட்பு பணிகளுக்காக துருக்கியில் களம் இறங்கி இருப்பதாக கூடுதல் … Read more

அமெரிக்க படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பிலால் அல் சுடானி!

Senior ISIS Leader Bilal Al Sudani Killed By US Soldiers Idamporul

அமெரிக்க படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டார் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பிலால் அல் சுடானி. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்த பிலால் அல் சுடானி அமெரிக்க படைகளால் சுட்டி வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தான், சோமாலியா பகுதிகளில் தலைமறைவாக செயல்பட்டு வந்த பிலாலை லாவகமாக சுற்றி வளைத்து சுட்டி வீழ்த்தி இருக்கிறது அமெரிக்க ராணுவம். “ தொடர்ந்து நடத்தப்படும் ரைடுகளில் நாட்டினை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் அனைத்து அமைப்புகளும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து … Read more

உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முற்படும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி!

America And Germany Seeking To Send Weapons To Ukraine Idamporul

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முன்வந்து இருக்கிறது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பெரும் போர் முடிவு நிலையை எட்டாமலே இருக்கிறது. தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனை சீண்டி வரும் நிலையில், ஆயுதங்கள் இன்றி உக்ரைன் தவித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முன்வந்து இருக்கிறது. “ இதனை … Read more

திடீர் மின்தடையால் இருளில் மூழ்கியது பாகிஸ்தான்!

Pakistan Electric Shutdown Idamporul

மின்பற்றாக்குறையால் முழு மின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுக்க இருளில் மூழ்கி கிடைக்கிறது. மின்பற்றாக்குறையால் பாகிஸ்தானில் முழுமின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் இருளில் தத்தளிக்கின்றன. பொருளாதார சிக்கல்கள், மின் தடை, ரயில் சேவை நிறுத்தம் என்று பாகிஸ்தான் பல்வேறு பிரச்சினைகளால் ஸ்தம்பித்து நிற்கிறது. “ திட்டமிடப்படாது தொடர்ந்து அரசை வழிநடத்தும் தலைமைகளே பாகிஸ்தானின் இந்த நிலைமைக்கு காரணம் என்று எதிர்கட்சிகள் ஆளும் அரசை வஞ்சித்து வருகின்றன “

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவியில் இருந்து விலகல்!

NZ Prime Minister Jacinda Announced Her Resigning Idamporul

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவியில் இருந்து விலகியது அங்கிருக்கும் அரசியலில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. லிபரல் லேபர் கட்சியின் சார்பாக வெற்றி பெற்று கடந்த 2017 அன்று பிரதமராக பொறுப்பேற்றவர் ஜெசிந்தா ஆர்டன். ’ஒரு சில பொறுப்புகளை நான் சரியாக செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன், இது தான் நான் பதவி விலக சரியான நேரம்’ என்ற வார்த்தைகளை கூறி தனது பதவியை நாட்டிற்காக அர்ப்பணித்து இருக்கிறார். “ ஒரு பெரும் தலைவர் தனது … Read more

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் போனி கேப்ரியல்!

Miss Universe 2023 R Bonney Gabriel Idamporul

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பட்டத்தை வென்றிருக்கிறார் அமெரிக்க அழகி போனி கேப்ரியல். 71 ஆவது மிஸ் யுனிவர்ஸ்சை போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. 86-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் திறன் மற்றும் நேர்த்தி அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த அழகியான ஆர் போனி கேப்ரியல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். “ இந்தியாவை சேர்ந்த திவிதா இந்த போட்டியில் 16 … Read more

700-க்கும் மேற்பட்ட விமானங்கள் முடக்கம், ஹேக் செய்யப்பட்டதா அமெரிக்க விமான சேவை மையம்?

Does US Airport Authority System Hacked Idamporul

அமெரிக்க விமான சேவை மையம் முடங்கியதால் கிட்ட தட்ட 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் அதன் சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க விமான சேவை மையம் முழுமையாக முடங்கியதால் கிட்டதட்ட 700-க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒரு பக்கம் ஹேக்கர்ஸ் விமான சேவை மையத்தை முடக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை அறிக்கையோ இது வெறும் தொழில்நுட்ப கோளாறு தான் என கருத்து தெரிவித்து இருக்கிறது. “ ஒரு சிறிய தொழில்நுட்பம் முடங்கினால் … Read more

பண்டிகைகளால் பன்மடங்கு பெருகிய கொரோனா, மருந்துகள் தட்டுப்பாடால் அவதியில் சீனா!

Corona Virus Much Increased In China Due To Festival Celebrations Idamporul

பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா மீண்டும் சீனாவில் பன்மடங்கு பெருகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய BF 7 வேரியன்ட் வேகமாக சீனாவில் பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா அங்கு பன்மடங்கு பெருகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கொரோனாவிற்கான மருந்துகள் மற்றும் மாத்திரை தட்டுப்பாடுகளும் நிலவி வருகிறதாம். “ ஒரு வைரஸ்சை உருவாக்க திட்டமிட்ட நாடே அந்த வைரஸ்சால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது, என … Read more