Sivaji The Boss | Re-View | ‘ஸ்டைலிஷ் ஆன மாஸ் ஆன கருத்தான ஒரு கமெர்சியல் படம்’

Rajini Kanth In And As Sivaji Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினி, ஸ்ரேயா சரண், விவேக், மணிவண்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 2007 ஆம் ஆண்டு வெளியாக மிகப்பெரிய ஹிட் திரைப்படம் தான் சிவாஜி தி பாஸ். சிவாஜியாக ரஜினிகாந்த், தான் வெளிநாடுகளில் சம்பாதித்த கோடிகளை எல்லாம், தான் பிறந்து வளர்ந்த தமிழ் நாடு, தமிழ் மக்களின் நன்மைக்காக, இலவச கல்வி, இலவச மருத்துவம் என பல திட்டங்களை கொண்டு வர முயல்கிறார். ஆனால் இங்கு ஏற்கனவே இவற்றை எல்லாம் நடத்திவரும் … Read more

KALKI 2898 AD | Trailer | Review | ‘பிரம்மாண்டம் தெரிகிறது, கதையும் பலம் என்றால் வெற்றி தான்’

Kalki 2898 AD Trailer Review In Tamil Idamporul

வைஜெயந்தி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நாக் அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலரை பார்க்கும் போது ஒரு மிகப்பெரிய பொருட் செலவு கண்ணில் தெரிகிறது. பிரம்மாண்டங்கள் வியக்க வைக்கின்றன. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான அனிமேசன் காட்சிகளை படக்குழு உருவாக்கி இருப்பது படத்திற்கு ப்ளஸ். பிரபாஸ்சின் வசனங்களில் கொஞ்சம் … Read more

Vetri Kodi Kattu | Re-View | ‘வெளிநாடு மோகத்தை, அதனை வைத்து நடந்த பல மோசடிகளை கட்டவிழ்த்த படம்’

Vetri Kodi Kattu Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் சேரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 2000 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தான் வெற்றி கொடி கட்டு. படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள், சேகராக முரளி, முத்து ராமன் ஆக பார்த்திபன், தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பை சார்ந்த இருவரும் தனது குடும்ப சூழல் வறுமை காரணமாக வெளிநாடு செல்ல முயற்சிக்கும் ஒரு குறிக்கோளால், ஒன்று இணைகின்றனர். கையில் இருந்த காசு, … Read more

Indian | Re-View | ‘கமெர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் கருத்தும் இருக்க வேண்டும் என்றால் அது ஷங்கர் தான்’

Indian Movie Review In Tamil Idamporul

இயக்குநர் ஷங்கர் அவர்களின் திரைக்கதையில், சுஜாதா அவ்ர்களின் எழுத்தில், ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசையில், நடிகர் கமல் ஹாசன், மனிஷா கொய்ரலா, சுகன்யா, கஸ்தூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 1996 காலக்கட்டத்தில் வெளியாகி சமூகத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்த திரைப்படம் தான் இந்தியன். பொதுவாகவே ஷங்கர் ஒரு படத்தை எப்படி அணுகுவார் என்றால், படம் கமெர்சியலாக அனைவரையும் போய் சேர வேண்டும் அதே சமயத்தில் படத்தில் கருத்தும் இருக்க வேண்டும், பிரம்மாண்டமும் இருக்க … Read more

Garudan | Review | ‘நடிகர் சூரிக்கு இரண்டாவது வெற்றி என்றே சொல்லி விடலாம்’

Garudan Movie Review In Tamil Idamporul

வெற்றிமாறன் அவர்களின் எழுத்தில், துரை செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னிமுகுந்தன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கருடன். கதை என்னவோ நமக்கு பரிட்சயப்பட்டதாக இருந்தாலும் கூட, அதை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்த விதம் தான் பாராட்டுதலுக்கு உரியது. நேர்மைக்கும், பல வருட விசுவாசத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் அந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறான், கடைசியில் எதை தெரிவு செய்கிறான் என்ற ஒரு வரிக் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி … Read more

Premam | Re-View | ‘அப்படியே மீண்டும் நம்மை நம் கடந்த காலத்திற்குள் பயணிக்க வைத்த ஒரு திரைப்படம்’

Premam Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் இயக்கத்தில், நிவின் பாலி, அனுபாமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி உலகளாவிய அளவில் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம். ஜியார்ஜ் என்னும் இளைஞன், அவனுடைய வாழ்வின் மூன்று பருவங்கள், அதில் துளிர்க்கின்ற காதல்கள், அதோடு பயணிக்கும் நட்பு இவ்வளவு தான் பிரேமம். ஒரு சிறு பேப்பருக்குள் அடங்கி விடும் படம் எப்படி இவ்வளவு ஹிட் ஆனது என்று கேட்டால், … Read more

Karnan | Re-View | ‘நட்பிற்காக, கொடுத்த வாக்கிற்காக உயிரையும் கொடுக்க துணிபவன் தான் கர்ணன்’

Sivaji In And As Karnan Movie Re View In Tamil

இயக்குநர் பி ஆர் பந்தலு அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவாஜி, என் டி ராமாராவ், சாவித்திரி, அசோகன், தேவிகா மற்றும் பலரின் நடிப்பில் 1964 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன். பாண்டவர்களுக்கு எல்லாம் மூத்தவனான கர்ணன், காலச் சூழலால், நட்பின் மீது கொண்ட மரியாதையால் ஒரு கட்டத்தில் போரில் தங்கள் தம்பிகளையே எதிர்கொள்ள வேண்டிய நிலை வருகிறது. ஆகப்பெரும் வீரனாக அறியப்படும் கர்ணன், கொடை வள்ளல், நேர்மையின் சிகரம் என்றெல்லாம் அறியப்பட்டாலும் … Read more

Manushi | Trailer | Review | ‘சம கால அரசியல் பலவற்றை பேச துடிக்கிறது மனுசி’

Manushi Trailer Review In Tamil Idamporul

வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கோபி நைனார் அவர்களின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா, நாசர், தமிழ், ஹக்கீம் என பலரின் நடிப்பில், இளையராஜா அவர்களின் இசையில் உருவாகி இருக்கும் ‘மனுசி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் குறித்து பார்க்கலாம். பிணைக்கைதிகளாக பிடிக்கப்படும் இருவர், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை, அதற்கு வரும் பதில்கள், அதற்குள் ஒரு சமகால அரசியல் என பலவற்றை மனுசி பேசி இருக்கும் என்பது போல தெரிகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் விசாரணை திரைப்படத்தின் சாயல் கொஞ்சம் தெரிகிறது … Read more

படையப்பா | Re-View | ‘இது மாறி ஒரு மாஸ் படத்த காட்டுறவனுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் ரா’

Padayappa Re View In Tamil Idamporul

அருணாச்சலம் சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா மற்றும் பலரின் நடிப்பில், 1999 காலக்கட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் படையப்பா. கதைக்கரு முதல் பாதியில் ஒரு சொத்தை மையப்படுத்தி ராமலிங்கம் (மணிவண்ணன்) வெர்சஸ் ஆறுபடையப்பன் (ரஜினிகாந்த்) என நகரும் கதை, இரண்டாம் பாதியில் தன் காதலை ஏற்க மறுத்து விட்டு, தன் வீட்டில் வேலை பார்த்த … Read more

Herbie – Fully Loaded | Re-View | ’ஒரு காமெடியான கார் ரேஸ் திரைப்படம்’

Herbie Full Movie Review In Tamil Idamporul

ஏஞ்சலா ராபின்சன் அவர்களின் இயக்கத்தில், லிண்ட்சே லோகன், மைக்கேல் கீட்டன், மேட் திலன் உள்ளிட்டோர் நடிப்பில் 2005 -யில் வெளியாகி கிட்ஸ்களை கவர்ந்த திரைப்படம் தான் ஹெர்பி – Fully Loaded. ஒரு டப்பாவான கார், அது உடைப்பிற்கு வருகிறது, அதை அங்கு கண்டெடுத்து ஒரு தந்தை தன் மகளுக்கு பரிசாக கொடுக்கிறார். அந்த கார் ஒரு அமானுஷ்யமான கார், அந்த காருக்கு ரேஸ்சில் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை. மேகியாக வரும் லிண்ட்சே லோகனை ஹெர்பி … Read more