ஒரு வயது குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை புரிந்து உலகச்சாதனை படைத்த மருத்துவர்கள்!

சென்னையில் ஒரு வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்றுக்கு பிறப்பிலேயே நுரையீரல் குறைபாடு இருந்தது அறியப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் இரண்டு நுரையீரலையும் மாற்றி உலகச் சாதனை படைத்து இருக்கின்றனர் சென்னை மருத்துவக்குழுவினர். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை ஒன்று பிறவியிலேயே ஆக்சிஜன் செறிவுத்திறன் குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது. பரிசோதித்ததில் இரண்டு நுரையீரல்களும் மாற்றினால் மட்டுமே குழந்தை பிழைக்க இயலும் என்ற நிலை இருந்ததாக கூறப்படுகிறது. பெரியவர்களுக்கே மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உடல் … Read more

விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டம் தொடக்கம்

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை தொடங்கியுள்ளது தேசிய அனல்மின் கழகம். தொடர்ந்து புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவரும் நிலையில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில அரசின் உதவியுடன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலைய நீர் தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் துவங்கியுள்ளது. 75 ஏக்கர் … Read more

GSLV F10 ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது – இஸ்ரோ தலைவர் சிவன்

புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10 தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர்,சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக்காக EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10, கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார். கொரோனோவின் காரணமாக தொடர்ந்து தாமதமான இஸ்ரோவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பின் தற்போது தொடங்கிய … Read more

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் GSLV F10 நாளை விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ

பேரிடர் எச்சரிக்கை,கனிமவியல்,வனவியல் குறித்த கண்காணிப்பிற்கான அது நவீன செயற்கை கோள் GSLV F10 மூலம் நாளை அதிகாலை 5:43-ற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளிமையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கொரோனோ சூழலில் தொடர்ந்து இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்கு இடையூறுகள் இருந்த நிலையில் எல்லா செயல்நிலைகளும் தாமதமாகி வந்தன. தற்போது சூழல் தகுந்தவாறு அமைந்தததால் இந்த வருடத்தின் இரண்டாவது GSLV வகை ராக்கெட் ஆனது EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கை … Read more

பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு … Read more

Contest என்னும் பெயரில் மக்களிடம் பணம் பறிக்கும் Instagram திருடர்கள்!

ஒரு காலத்தில் வீடு ஏறி குதித்து திருடியவர்கள் இன்று அவர்களின் வீட்டிற்குள்ளேயே சொகுசாக இருக்கையில் உட்கார்ந்து இணையத்தில் இருந்து கொண்டு திருடுகின்றனர். சமீப காலமாக கவிதை போட்டி, ஓவிய போட்டி, கதை எழுதும் போட்டி, மீம் கிரியேசன் போட்டி என்று இன்ஸ்டாகிராமில் Suggested போஸ்ட்கள் தொடர்ந்து வலம் வருகின்றன. Suggested போஸ்ட் என்பது நீங்கள் அந்த பேஜை தொடரவில்லையெனினும் அது உங்கள் பக்கத்தில் ஒரு விளம்பரம் போல வந்து நிற்கும். அதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் … Read more