ரக்ஷா பந்தன் | ‘படம் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை 1000 ஷோக்கள் ரத்து’
Raksha Bandhan Akshay Kumar
அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை கிட்ட தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
அக்ஷய் குமார் மற்றும் இயக்குநர் ஆனந்த் ராய் இயக்கத்தில் உருவான ரக்ஷா பந்தன் 11-08 அன்று வெளியாகி இருந்த நிலையில், படம் வெளியாகி இரண்டு நாள் கூட முழுதாக முடியவில்லை கிட்ட தட்ட 1000 ஷோக்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலான தியேட்டர்களில் 30 சதவிகிதம் மக்கள் பார்ப்பது கூட அதியசமாக பார்க்கப்படுகிறதாம்.
“ மக்களின் ரசனை உயர்ந்து கொண்டே சென்று இருப்பதும், பாலிவுட்டால் அந்த ரசனையை ஈடு கட்ட முடியாததுமே தொடர் பாலிவுட் தோல்விகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது “