ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருக்கும் ‘சூரரைப் போற்று’!
Soorarai Potru Actor Surya
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில், கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சூரரைப் போற்று. இப்படம் ஒரு க்ளீன் ஹிட் ஆக அமைந்த நிலையில், தற்போது ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
” ஒரு தரமான படத்திற்கு அங்கீகாரம் என்பதே விருதுகள் தான், நிச்சயம் இப்படம் தேசிய மேடையில் பல விருதுகளை அள்ளும், நம்புவோம் “