மீண்டும் ரீ ரிலிஸ் ஆகும் கமல்ஹாசன் அவர்களின் ஆளவந்தான்!
Aalavandhan Re Release Plan Idamporul
கமல்ஹாசன் அவர்களின் ஆளவந்தான் திரைப்படம் உலகம் முழுக்க உள்ள ஆயிரம் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கமல் ஹாசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து 2001 அன்று வெளியாகி டெக்னிக்கலாக பலரையும் பிரம்மிக்க வைத்த திரைப்படம் ஆளவந்தான். வசூல் ரீதியாக தோல்விப்படம் என்றாலும் இன்றும் அந்த திரைப்படம் பேசுபொருளாக இருப்பதால் தாணு அவர்கள் டிஜிட்டல் ஆடியோவை இணைத்து மீண்டும் ஆளவந்தானை ரீ ரிலிஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து கமல்ஹாசன் அவர்களின் அடுத்த படைப்பு என்ன என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்த நிலையில் இந்த ரீ ரிலிஸ் அவர்களுக்கு ஆறுதலாக அமையும் “