நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67-யில் ஆக்சன் கிங் அர்ஜூன்!
Action King Arjun In Thalapathy 67
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் நடிகர் அர்ஜூன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து இருக்கிறார். இதில் புதிய தகவல் என்னவென்றால் நடிகை திரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களும் தளபதி 67-யில் இணைந்து இருக்கிறாராம்.
“ ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்களுடன் ஒரு மாஸ் ரோல் செய்து இருந்தார் நடிகர் அர்ஜூன். அது போல ஒரு வில்லன் மற்றும் ஹீரோயிசம் கலந்த ரோலை தான் தளபதி 67-யில் விஜய் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்களாம் “