நடிகர் அஜித்குமார் அவர்களுடன் இணைகிறாரா இயக்குநர் பிரசாந்த் நீல்?
Prashanth Neel Join Hands With Ajith Kumar Fact Here Idamporul
கே ஜி எப், சலார் படத்தின் இயக்குநர் நடிகர் அஜித்குமார் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குறிப்பிட்ட கால இடைவெளியில், தவிர்க்க முடியாத பான் இந்தியா இயக்குநராக உருவெடுத்து இருக்கும் பிரசாந்த் நீல், நடிகர் அஜித்குமார் அவர்களுடன் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் படத்தை தயாரிக்க தானாக முன்வந்து இருக்கிறதாம்.
இது இப்போது எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும் கூறப்படுகிறது. கே ஜி எப் 1 திரைப்படம் முடிந்ததுமே 2018 காலக்கட்டத்தில் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் அஜித்குமார் அவர்கள் ஒரு ஸ்டோரி டிஸ்கசன் வைத்துக் கொண்டார்களாம். ஆனால் அப்போது அஜித் அவர்கள் பிசியாக இருந்த காரணத்தால் அந்த படத்தின் முன்னெடுப்புகளை அப்போது எடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
“ மகிழ்திருமேனியின் விடா முயற்சி, ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என இரண்டு படங்கள் முடிந்த பிறகு பிரசாந்த் நீல் உடன் அஜித்குமார் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது “