எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடிகர் அஜித் அவர்களுக்கு ரகசியமாக நடைபெற்ற மூளை அறுவை சிகிச்சை?
Actor Ajith Kumar Undergone Brain Surgery Fact Here Idamporul
நடிகர் அஜித்குமார் அவர்கள் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது அவருக்கு மூளையில் ஒரு அறுவைச்சிகிச்சை நடைபெற்று இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
பொதுவாகவே அஜித்குமார் அவர்கள் எங்கு சென்றாலும், எந்த ஒரு விடயங்கள் செய்தாலும் அதில் ரகசியம் காக்கப்படும். இந்த நிலையில் காலை முதலே நடிகர் அஜித்குமார் அவர்கள் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. பலரும் முதுகுதண்டுவட செக் அப்பிற்காக இருக்கலாம் என நினைத்த நிலையில், மூளையில் ஒரு அறுவைச் சிகிச்சை ஒன்று அஜித் அவர்களுக்கு நடைபெற்று இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
சில நாட்களாகவே பெரும் தலைவலியால் அவதிப்பட்ட அஜித் அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பல்வேறு ஆராய்விற்கு பின்னர் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாம். பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், பிரபல மருத்துவர்கள் முன்னிலையில் நான்கு மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பின் அக்கட்டி அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
“ ஒரு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இது குறித்து அஜித் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட ஒரு சில நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து இந்த தகவல்கள் கிடைத்து இருக்கிறது “