நடிகர் அர்ஜூனின் மகளை மணம் முடிக்க இருக்கும் தம்பி ராமையாவின் மகன்!
Actor Arjun Daughter Marrying Thampi Ramaiyah Son Idamporul
நடிகர் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூன் அவர்களை, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூனும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நவம்பர் மாதம் நிச்சயித்து திருமணத்தை ஜனவரி மாதம் வைத்துக் கொள்ள இருப்பதாக நடிகர் தம்பி ராமையா அவர்களின் தரப்பு கூறி இருக்கிறது.
“ பல்வேறு படங்களில் நடிகர் அர்ஜூன் பிசியாக இருப்பதால் திருமண நிச்சயத்தை இருவரும் கலந்து பேசி நவம்பர் 8 ஆம் தேதி வைத்துக் கொள்ள முடிவு செய்து இருக்கின்றனராம் “