பிரபல நடிகரின் மகளை மணம் முடிக்கிறாரா நடிகர் அசோக் செல்வன்!
Ashok Selvan Marrying Keerthy Pandian Fact Here Idamporul
பிரபல நடிகர் ஒருவரின் மகளை, நடிகர் அசோக் செல்வன் வெகுவிரைவில் மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அசோக் செல்வன் சில நாட்களாகவே பிரபல நடிகரான அருண் பாண்டியன் அவர்களின் மகளான கீர்த்தி பாண்டியன் அவர்களுடன் பொது வெளியில் தென்பட்டு வந்தார். இந்த நிலையில் இருவரும் வரும் செப்டம்பர் 13 அன்று நெல்லையில் திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
அசோக் செல்வனை போல, கீர்த்தி பாண்டியன் இந்த கோலிவுட் ரசிகர்களுக்கு பெரிதாக பரிட்சயம் இல்லாதவர். ஆனாலும் போஸ்ட்மேன், தும்பா, அன்பிற்கினியாள் என்ற மூன்று தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அது கிசுகிசுவாக கிளம்புவதற்கு முன்னர், இவர்களே கல்யாண செய்தியுடன் வந்துவிட்டனர் “