நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகி இருக்கிறது!
Actor Dhanush In Naane Varuvean Teaser Is Out
நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ், இந்துஜா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கும் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ ஒரே நடிகன் தான் ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு முகம், நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்பதே கதை என்று டீசரை பார்த்தால் புலப்படுகிறது, இரண்டு கதாபாத்திரத்திற்க்கும் நடிகர் தனுஷ் மெனக்கெட்டு இருக்கிறார் என்பதும் டீசரை பார்த்தால் தெரிகிறது “