மரகத நாணயம் இயக்குநருடன் இணைகிறாரா நடிகர் தனுஷ்?
Maragatha Naanayam Director Join Hands With Dhanush Fact Here Idamporul
மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குநர் சரவண் அவர்களுடன் நடிகர் தனுஷ் அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் ஒரு ஹிட் கொடுத்து இருந்த இயக்குநர் சரவண், தற்போது ஹிப் ஹாப் ஆதியுடன் வீரன் என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்து இருக்கிறார். அடுத்ததாக தனுஷ் அவர்களை சந்தித்து இரண்டு கதைகளை கூறி இருக்கிறாராம். வெகுவிரைவில் அதற்கான அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ வெற்றி மாறன், மாரி செல்வராஜ் என்ற வரிசையாக, தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் இயக்குநர் ஏ ஆர் கே சரவணுடனான இணைவு எப்போது நிகழும் என்பதை தனுஷ் தரப்பே கூற வேண்டும் “