நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Dhanush Nane Varuven Teaser Update
நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் 15-09-2022 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ தனுஷ் – செல்வராகவன் இணையும் இத்திரைப்படம் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி எனவும் கூறப்பட்டு வருகிறது. என்ன ஏது என்பதை டீசர் வந்ததும் தெரிந்து கொள்வோம் “