நடிகர் ஜெய் அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!
Actor Jai New Film Update Idamporul
நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவாடா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ‘தீராக்காதல்’ என படக்குழு பெயர் வைத்து அதன் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
“ அதே கண்கள், பெட்ரோமேக்ஸ் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் என்பதாலும், நடிகர் ஜெய் அவர்களின் பெரிய இடைவெளிக்கு பின்னர் ஒரு திரைப்படம் என்பதாலும் படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது “