உண்மை கதை என்று எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரியில் எந்த வித உண்மையும் இல்லை – கமல் ஹாசன்
Kamal Hassan About Kerala Story Movie Idamporul
உண்மை கதை என்று எடுக்கப்பட்டு இருக்கும் கேரளா ஸ்டோரியில் எந்த வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.
கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் வேளையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் அத்திரைப்படத்தை பற்றி கூறி இருப்பதாவது, உண்மை கதை என்று எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் எந்த உண்மையும் இருப்பதாக தெரியவில்லை ஏதோ தனிப்பட்ட கருத்துக்களை திணித்து ஒற்றுமையாக இருக்கும் மக்களை குழம்ப வைக்கும் ஒரு திரைப்படம் அவ்வளவு தான் என கூறி இருக்கிறார்.
“ சினிமாவில் கருத்து சுதந்திரம் என்பது நிச்சயம் உண்டு ஆனால் ஒரு சார்பான கருத்துக்களை மக்களிடம் திணிக்கும் வகையில் இருக்க கூடாது என்று இணையவாசிகளும் கமல்ஹாசன் அவர்களுக்கு சப்போர்ட்டாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் “