வெளியானது கமல்ஹாசன் – மணி ரத்னம் இணையும் KH 234 படத்தின் டைட்டில்!
KH 234 Kamal Manirathnam Project Title Announced Idamporul
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணையும் KH 234 திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி, அபிராமி, நாசர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் KH 234 திரைப்படத்தின் டைட்டில் ‘Thug Life’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. டைட்டில் வீடியோ மாஸ்சாக இருக்கிறது, ஆனால் டைட்டில் ஏன் இப்படி என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“ மணிரத்னம், கவுதம் மேனன் படங்கள் என்றாலே டைட்டில் கவித்துவமாக இருக்கும், ஆனால் இது என்ன புதிதாக வித்தியாசமாக ஒரு டைட்டில் என இணையவாசிகள் புலம்பி வருகின்றனர் “