நடிகர் சிம்பு பாணியில் படப்பிடிப்பு தளத்திற்கு சீக்கிரம் வர மறுக்கும் கவின்?
Kavin Always Late For Film Shoot What Is Really Happening Fact Here Idamporul
நடிகர் கவின் அவர்கள் தான் கமிட் ஆகி இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு தற்போதெல்லாம் சரியான நேரத்திற்கு வருவதில்லை என ஒரு புகார் ஒன்று கிளம்பி இருக்கிறது.
லிப்ட், டாடா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த கவின், தற்போதெல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதாக ஒரு புகார் எழுந்து இருக்கிறது. அவருக்காக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு வெகு நேரம் படப்பிடிப்பு தளத்தில் காத்திருக்க நேரிடுவதாக கூறி வருகின்றனர்.
இது குறித்து கவின் தரப்பு கூறுகையில் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை, படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் கவின் சென்று வருகிறார் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தரப்பினரோ இது இன்று நேற்று இல்லை காலம் காலமாக நடந்து வருகிறது. வளர்ந்ததும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் செய்கின்ற ஒன்று தான் என கூறி இருக்கின்றனர்.
“ பொதுவாக கவின் குறித்து பரவி வரும் இந்த செய்திக்கு, நடிகர் கவின் தாமாக முன்வந்து விளக்கம் கொடுத்தால் சரியாக இருக்கும் என கவின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “