தமிழ் சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது – பவண் கல்யாண்
Tamil Cinema Circle Is Very Small Says Pawan Kalyan Idamporul
தமிழ் சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது என நடிகர் பவண் கல்யாண் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமா மற்ற மாநில நடிகர்களை நடிக்க அனுமதிப்பதில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கோலிவுட் சுருங்கி இருக்கிறது. மற்ற மாநில நடிகர்களை அனுமதித்தால் மட்டுமே ‘RRR’ போன்ற பான் இந்தியா படங்கள், தமிழிலும் வர வாய்ப்பு இருக்கும் என்று தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் பவண் கல்யாண் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
“ பவண் கல்யாணின் இந்த கருத்திற்கு கோலிவுட் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர். ஒரு பக்கம் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது “