மறைந்த புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
Actor Puneeth Rajkumar James Movie Teaser Is Out
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நடித்து இருக்கும் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் மாரடைப்பால் காலமான நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களை இனி திரையில் காண முடியாமல் போய் விடுமோ என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில் அவர் கடைசியாக நடித்துக் கொடுத்துச் சென்ற ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கண்ணீர் மழையில் நனையச் செய்து இருக்கிறது.
“ எப்போதும் கொண்டாட்டத்தோடும் உற்சாகத்தோடும் டீசரை வரவேற்கும் ரசிகர்கள், முதன் முறையாக கண்ணீரோடு வரவேற்கின்றனர் “