இயக்குநர் அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கும் நடிகர் ஷாருக்கான், காரணம் என்ன?
Actor Sharukh Khan Warn Director Atlee
ஒரு சில புரொடக்ஷன் பிரச்சினைகளால், இயக்குநர் அட்லீ மீது நடிகர் ஷாருக்கான் செம்ம காண்டில் இருக்கிறாராம்.
இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் இணையும் ‘ஜவான்’ திரைப்படத்தை, ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ப்ரீ புரொடக்சனுக்காக கொடுத்த பட்ஜெட்டை மீறி அட்லீ செலவு இழுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஷாருக், அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கிறாராம்.
“ இது இந்த படத்தில் மட்டும் நிகழவில்லை, அட்லீயின் முன்னாள் படங்களிலும் இந்த பட்ஜெட் மீறுதல் நிகழ்ந்து இருக்கிறதாம். என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “