நடிகர் சித்தார்த் அவர்களின் ‘டக்கர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
Actor Siddharth Takkar Movie Teaser Is Out Idamporul
நடிகர் சித்தார்த் அவர்களின் ‘டக்கர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இருக்கிறது.
சுதன் மற்றும் ஜெயராம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்தி ஜி கிரிஷ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா, யோகி பாபு, முனீஸ் காந்த், விக்னேஷ் காந்த், அபிமன்யு சிங் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டக்கர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்ட்டிக் ஆக்சன் திரில்லராக தெரிகிறது, சித்தார்த் நீண்ட நாட்களுக்கு பின்னர் களத்தில் இறங்கி இருக்கிறார். படம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “