‘தற்போதைக்கு திருமணம் செய்யும் நோக்கம் இல்லை’ – சிலம்பரசன்
Silambarasan Recent Interview
சமீபத்தில் சிலம்பரசன் அவர்கள் வெளியிட்ட பேட்டி ஒன்றில் தற்போதைக்கு திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என கருத்து தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சிலம்பரசனிடம் பத்திரிக்கையாளர்கள் எப்போதும் கேட்கும் கேள்வி என்பது ‘உங்களுக்கு எப்போது திருமணம் என்பதாகவே இருக்கிறது?’. அவசர அவசரமாக திருமணத்தை செய்து விட்டு விவாகரத்தில் நிற்பதை விட பொறுமையாக துணையை தேடிக்கொள்ளலாம் என்று சிலம்பரசனும் பதிலளித்து இருக்கிறார்.
சிம்பு அவர்கள் ஏதேனும் பேட்டியைக் கொடுக்க மைக்கை தொட்டாலே அவரை சுற்றி சர்ச்சைக்குரிய கேள்விகளை மட்டும் கேட்பதுவே வாடிக்கையாகி வருகிறது. நிகழ் கோலிவுட்டில் இரண்டு மிகப்பெரிய வெற்றிகளே நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்று மாநாடு, இன்னொன்று விக்ரம்.
“ சிம்புவிற்கு இருக்கும் திறமைக்கு இன்னும் சில காலம் கூட அவர் திருமணத்திற்கு பொறுத்தி சினிமாவில் முழுக்க முழுக்க களம் இறங்கி அடிக்கலாம் “