நடிகர் விஜய் அவர்களின் ’வாரிசு’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் சிலம்பரசன்?
Silambarasan Cameo Role In Varisu
நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தில், நடிகர் சிம்பு அவர்கள் ஒரு சிறிய கேமியோ ரோலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாரிசு திரைப்படத்தின் ’தீ தளபதி’ பாட்டில் சிலம்பரசன் தோன்றி இருந்தது முதலே ரசிகர்களுக்கு ஒரு சின்ன பொறி கிளம்பியது, படத்திலும் சிலம்பரசன் இருப்பாரோ என்று, அது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. நடிகர் சிலம்பரசன் ஒரு சிறிய கேமியோ ரோலில் இருப்பதை உறுதி செய்து இருக்கிறது படக்குழு.
“ ஏற்கனவே சிம்பு ரசிகர்கள் தீ தளபதி பாட்டை கொண்டாடி தீர்த்தனர். இந்த சேதி தெரிந்தால் இனி வாரிசு திரைப்படத்திற்கும் சேர்த்து டிக்கெட்டை புக் செய்து விடுவர் “