இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமுருகி நன்றி தெரிவித்த நடிகர் சூரி!
Viduthalai Soori Recent Interview Idamporul
இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனமுருகி நன்றி தெரிவித்து இருக்கிறார்.
காமெடியன் என்ற வேடத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டு இருந்த நடிகர் சூரியை விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக்கி ரசித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இதன் காரணமாக நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் ’எனக்குள் இருந்த நடிகனை வெளிக்கொணர்ந்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என கூறி இருக்கிறார்.
“ வெற்றிமாறன் அவ்வளவு எளிதில் ஹீரோக்களை செலக்ட் செய்வதில்லை, நிச்சயம் சூரி அதற்கு தகுதியானவர் தான், இன்னும் பல படங்களில் அவர் லீட் ரோலில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையும் “