கடைசி கட்ட பணியில் இருக்கும் சூரி மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம்!
Actor Soori And VJS
நடிகர் சூரி – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை நெருங்கி இருக்கிறது.
ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை எட்டி உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் சூரி வித்தியாசமான கதைக்களத்தில், அதிலும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
“ இந்த படம் முடிந்த கையோடு, சூரி தனது அடுத்த படத்தில் இயக்குநர் அமீருடன் இணைய இருப்பது மேலும் பெருமை சேர்க்கும் தருணம், ஹீரோவாக சூரி நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை “