ஜெய் பீம் இயக்குநருடன் மீண்டும் இணையும் நடிகர் சூர்யா!
Actor Suriya In Jai Bhim Idamporul
ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் அவர்களுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் அவர்களின் இணைவில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பொது தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், மீண்டும் இந்த காம்போ சாத்தியமாக இருக்கிறது. மீண்டும் ஒரு உண்மைக் கதையை எடுத்துக்கொண்டு அதை இந்த காம்போ படமாக்க திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ ஹரி, சுதா கொங்கரா, ஞானவேல் என்று வரிசையாக சூர்யாவிற்கு கதை சொல்லி இயக்குநர்கள் காத்து இருக்கும் நிலையில் ஹரி அல்லது ஞானவேல் அவர்களின் படம் முதலில் துவங்க சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது “