நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Suriya In And As Etharkum Thunindhavan Release Date Announced
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்து உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பிப்ரவரி 4 அன்று 5 மொழிகளில் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ சூரரைப் போற்று, ஜெய் பீம் என்று இரண்டு படங்களை தொடர்ந்து வலைதளத்தில் வெளியிட்ட சூர்யா அவர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் போல “