நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா அவர்கள் இணையும் கங்குவா திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக 5 மொழிகளில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூலை 23 அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் 5 மொழி டீசருக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள் குரல் கொடுக்க இருப்பதாக கூடுதல் தகவல்.
“ தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ’கங்குவா’ டீசருக்கு குரல் கொடுக்க இருக்கிறாராம் “