இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!
Actor Suirya Thanking To Lokesh Kanagaraj
விக்ரம் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததிற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் சூர்யா.
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது விக்ரம். இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் வருகின்ற சூர்யாவின் கேமியோவை ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்து வரும் நிலையில், சூர்யா இந்த வாய்ப்பிற்கு லோகேஷ்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
” மிரட்டலான லுக்கில், கம்பீரமாய் தோன்றும் இந்த கேமியோ நிச்சயம் கோலிவுட்டில் இன்னும் பல வருடங்களுக்கு நின்று பேசும் “